Posts

"பொய் சாட்சி"

Image
"பொய் சாட்சி"  நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள்  திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளும் (Witnesses), சாட்சியங்களும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. "சாட்சிகள் தான் நீதிமன்றத்திற்கு கண்களும், காதும் ஆகும்.  யாராவது ஒருவர், சட்டப்படியும் நீதியின்படியும் சத்தியப் பிரமாணம் செய்து தான் கூறப்போவது உண்மையை மட்டும் தான் என சத்தியம் செய்து சான்று அளிக்கும்போது போது உண்மையை மட்டும் கூறவேண்டும்.  பொய்யானதை உண்மையென்று கூறுவதைப் பொய்ச் சான்று அளித்தல் என்கிறோம்.  . வாய்மொழியாகக் கொடுக்கும் வாக்குமுலத்தையன்றி எழுத்து முலமாகத் தரப்படும் வாக்குமூலங்களும் இதில் அடங்கும். நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்வது பற்றி  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 191 லிருந்து 229 வரை தெளிவாக கூறப்பட்டுள்ளது.  இதன்படி பொய் சாட்சி சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பிரிவு - 195 : பொய் சாட்சி என்றால் என்ன? சட்ட விதிமுறைகளுக்கோ அல்லது உண்மைமையே பேசுவதாக தான் எடுத்துக் கொண்ட பிர

புதிய போக்குவரத்து காப்பீடு சட்டம்

Image
*1 ஏப்ரல் 2022 முதல் நீதிமன்றம், மற்றும் போக்குவரத்து துறையின் வழிகாட்டுதலின்படி. காப்பீட்டு நிறுவனங்கள் பின்வருவனவற்றைச் செயல்படுத்தும்:*_  _*1).* ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள், *அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல்* காப்பீட்டின் கீழ் வரமாட்டார்கள்._  _*2).* மேலே உள்ள நிபந்தனைகள் *2, 4 சக்கர வாகனப் பயணிகளுக்கும் பொருந்தும்.*_  _*3).* *ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல்* காப்பீட்டின் கீழ் வராது._  _*4).* தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏதேனும் விபத்து நடந்தால், *தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது & சரியான பாதையில் வாகனத்தை ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது.  _*5).  குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் காப்பீட்டின் கீழ் வரமாட்டார்கள்* மற்றும் எந்த இழப்புக்கும் இழப்பீடு இல்லை._  _*6).*தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டால்,  அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் வரை வசூலிக்கப்படும்* அது காயமடைந்தவர்களுக்குக் கொடுக்கப்படும்.  அவரால் அதைக் கொடுக்க முடியவில்லை என்றால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.  _*7).* *மொபைலில் பேசி விபத்து ஏற்படுத்து

கணவனுக்கு ஜீவனாம்சம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Image
கணவனுக்கு_ஜீவனாம்சம் உயர்நீதிமன்ற_தீர்ப்பு! ஆசிரியையாகப் பணிபுரியும் மனைவி, தனது கணவனுக்கு  மாதந்தோரும் ரூ.3,000 பராமரிப்புத் தொகையை வழங்குமாறும், பள்ளி முதல்வரிடம் ஆகஸ்ட், 2017 முதல் செலுத்தப்படாத பராமரிப்புத் தொகைக்காக மனைவியின் சம்பளத்தில் இருந்து ரூ.5000 பிடித்தம் செய்து நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறும் நாந்தேட் சிவில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள 2 உத்தரவுகளை உறுதிசெய்தது பாம்பே உயர்நீதிமன்றம்.  இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 25 ஆனது, விவாகரத்து ஆணைக்குப் பிறகும், ஆதரவற்ற மனைவி/கணவனுக்கு இடைக்கால அல்லது நிரந்தர ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமையை வழங்குகிறது.  வழக்கு  ------------ ஏப்ரல் 17, 1992 இல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் 2015 இல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு கணவர் மனைவியிடம் இருந்து மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார்.  மனைவி எம்.ஏ., பி.எட்., படித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மனைவி பட்டம் பெற, தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைத்து, வீட்டை நிர்வகித்து வந்ததாகவும், தனக்கென வருமானமும், அசையா சொத்துக்கள் ஏதும் இல்

ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி

Image
ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் பெறுவது முறை - OBC Certificate Apply தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப் படம், வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் அட்டை/குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: https://www.tnesevai.tn.gar.in என்ற இணையதனத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Opdian இருக்கும். Sign in பகுதியில் Franchsee Logim மற்றும் Citizen Login avsärgy Option-air கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Citzen Login என்ற 0ption-ஐ கினிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுன்ள New LJanr Option-ஐ கிலிக் செய்து, அதில் கேட்சுப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பகுறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கம் பட்ட அனைத்து விபரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.) விபரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு தீங்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி wavaming OTP (One Time Password) வரும். அதை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Li மற்றும் Passwced-ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும். Login செய்த பின்னர் அப்பாகுதியில் உள்ள Depaiment Wise → Reversus Cepartmernt Optionஐ கிளிக் செய்து OBC

அரசு பேருந்து விபத்து வழக்குகளுக்கு தீர்வு

Image
விபத்து வழக்கில் குற்றவாளி இல்லாத நிலையிலும் காவல்துறை ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்கிறது  ஆரம்ப நிலையிலேயே இதை தடுப்பது எப்படி?  என்பதை பார்ப்போம் பொதுவாக விபத்து ஏற்படும்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.. சில பிரத்தியேக சூழ்நிலைகளில் மட்டும் விபத்துக்கு தொழிலாளி பொறுப்பில்லை என்று ஆரம்ப நிலையிலேயே தெரியும் போது நமது தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை.95 சதம் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.  இப்படிப்பட்ட சமயங்களில் நாம் விபத்துக்கு எந்த அடிப்படையில் பொறுப்பில்லை என்பதை நேரடியாக காவல்துறையிடம் தெளிவுபடுத்த வேண்டும்.சம்மந்தப்பட்ட தொழிலாளி பேசுவதை காவல்துறை விரும்பாது .எனவே சங்கம் நேரடியாக தலையிட்டு காவல்துறையிடம் விளக்கலாம் .தற்போது பெரும்பகுதியான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.விபத்தான இடத்தில் ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து அதனுடைய புட்டேஜ் எடுத்து காவல்துறையிடம் விளக்கலாம். நம்மால் தெளிவாக காவல்துறையிடம் விளக்க முடியுமானால் காவல்துறை வழக்கை கைவிட முடியும். 

சூரியன் உதயம் முன்பு கைது

Image
சிவில் வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது பிரிவு 55(CPC) ன் படி சூரியன் மறைந்த பிறகும் சூரியன் உதிப்பதற்கு முன்பும் வீட்டினுள் நுழைதல் கூடாது.  பிரிவு 56 ஆனது, பணம் செலுத்தவேண்டியதற்காக பெண்ணை கைது செய்வதற்கும் மற்றும் காவலில் வைப்பதற்கும் தடை விதிக்கிறது.

ஏல சீட்டு எடுத்தவர் மீது நடவடிக்கை

Image
சீட்டு நிதிச் சட்டம்  (Chit_Funds_Act, 1982) பிரிவுகள் 4 மற்றும் 76 ன்படி ஒரு சீட்டை பதிவு செய்யாமல் நடத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.  சட்டத்திற்கு புறம்பான செயலின் அடிப்படையில் நடைபெற்ற ஒன்றிற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இயலாது.  எந்தவொரு நீதிமன்றமும் சட்டத்திற்கு புறம்பான செய்கையின் அடிப்படையில் எழும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான உதவியை அளிக்கக்கூடாது.  இருவரும் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டிருப்பார்களேயானால் சட்டம் அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.   இந்த அடிப்படையில் தவறான காரியங்களுக்கு சட்டத்தின் உதவி கிடைக்காது.  "பதிவு செய்யப்படாத சீட்டை நடத்தி வருவது சட்டப்படி தவறான ஒன்றாகும்.  அப்படி ஒருவர் ஒரு சீட்டை நடத்தி வந்து, சீட்டை எடுத்தவர் மீது பணத்தை வசூலிக்க " உரிமையியல் நீதிமன்றத்தில்" வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறான செயல்களுக்கு நீதிமன்றம் துணை போக முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  Revathi and Others Vs S. Murugesan  2012-5-LW-CIVIL-229