அரசு பேருந்து விபத்து வழக்குகளுக்கு தீர்வு

விபத்து வழக்கில் குற்றவாளி இல்லாத நிலையிலும் காவல்துறை ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்கிறது 

ஆரம்ப நிலையிலேயே இதை தடுப்பது எப்படி? 

என்பதை பார்ப்போம்
பொதுவாக விபத்து ஏற்படும்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.. சில பிரத்தியேக சூழ்நிலைகளில் மட்டும் விபத்துக்கு தொழிலாளி பொறுப்பில்லை என்று ஆரம்ப நிலையிலேயே தெரியும் போது நமது தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை.95 சதம் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. 

இப்படிப்பட்ட சமயங்களில் நாம் விபத்துக்கு எந்த அடிப்படையில் பொறுப்பில்லை என்பதை நேரடியாக காவல்துறையிடம் தெளிவுபடுத்த வேண்டும்.சம்மந்தப்பட்ட தொழிலாளி பேசுவதை காவல்துறை விரும்பாது .எனவே சங்கம் நேரடியாக தலையிட்டு காவல்துறையிடம் விளக்கலாம் .தற்போது பெரும்பகுதியான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.விபத்தான இடத்தில் ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து அதனுடைய புட்டேஜ் எடுத்து காவல்துறையிடம் விளக்கலாம். நம்மால் தெளிவாக காவல்துறையிடம் விளக்க முடியுமானால் காவல்துறை வழக்கை கைவிட முடியும். 

முதல் தகவல் அறிக்கை என்பது ஆரம்பநிலை புகார் தான். முதல் தகவல் அறிக்கை உண்மையா? என்பதை ஆய்வு செய்து தகுந்த சாட்சியங்களுடன் காவல்துறை குற்றப்பத்திரிகையை (சார்ஜிட்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். எனவே விபத்து நடந்தவுடன் நாம் காவல் துறையை அணுகி தெளிவு படுத்தினால் காவல்துறை முதல் தகவல் அறிக்கை உண்மைக்கு மாறான புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. எனவே முதல் தகவல் அறிக்கையை மிஸ்டேக் ஆப் பேக்ட் (எம்எப்)என கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வைக்க முடியும் .பல வழக்குகளில் நமது தோழர்கள் இதுபோன்ற எம்எப் செய்த அனுபவம் உண்டு .உண்மையை தெரிந்து கொண்டும் எம்எப் போட காவல்துறை மறுக்கும் நிலையில் காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு இதுபோன்ற நடவடிக்கையை செய்ய முடியும். அவ்வாறு முறையிடுவதற்கு நிர்வாகத்தை பயன்படுத்த வேண்டும். 


தவறான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அதை ரத்து செய்ய நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என கழக அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறை கடந்தகாலத்தில் உத்தரவிட்டுள்ளது. இதையெல்லாம் முறையாக பயன்படுத்த வேண்டுமெனில் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு செல்வது விபத்து நடந்த முறையை நாமே ஆய்வு செய்வது முக்கியமானது .அதன் மூலம் தவறான 
எப் ஐ ஆர்ஐ தடுக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். 

நன்றி🙏
அவர் விஜிலன்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா*

Comments

Popular posts from this blog

(20ஜன21.20)சவுராஷ்டிரா சத்திரம்

உணவு வகைகளின் கலோரி அட்டவணை

கம்யூடேசன் முடிந்தவுடன் அப்ளிகேஷன் கொடுக்க வேண்டுமா?