Posts

Showing posts from January, 2020

(36ஜ29.2)டிக்கெட் கட்டணத்தை தாமதமாக செலுத்திய கண்டக்டர் பணி நீக்கம்

*பயணச்சீட்டு கட்டணம் தாமதமாக* *செலுத்திய நடத்துநர் பணிநீக்கம்* *உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்* சென்னை , ஜன. 26: பயணிகளிடம் வசூலித்த கட்டணத்தை தாமதமாக நிர்வாகத்துக்கு செலுத்திய நடத்துநரை பணிநீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (திருவண்ணாமலை) நடத்துநராக பனியாற்றியவர் சேகர். இவர், பயணிகளிடம் இருந்து வசூலித்த பயணச் சீட்டுக்கான தொகையை காலதாமதமாக அலுவலகத்தில் செலுத்தியதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சேகர் தொடர்ந்த வழக்கை விசாரித்த வேலூர் தொழிலாளர் நீதிமன்றம், அவருக்கு மீண்டும் பணி வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது: பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய தொழிலாளர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரத்தை எந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள கேள்வி. இந்தஅதிகாரத்

(35ஜ30.2)அரசு பஸ் ரிசர்வேஷன் புதிய APP

*அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய செயலி* சென்னை: அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுக்கு தனி செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் செயல்பாட்டை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும், தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக 240 பேருந்துகளின் செயல்பாட்டையும் அவா் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது இந்தச் செயலி வழியாக முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வா் கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். புதிய பேருந்துகள்: பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், புதிய பேருந்துகள் தயாராகியுள்ளன. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 37 பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 103 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 25 பே

(34ஜ29.2)பஸ்களில் தீ தடுப்பு கருவிகள்

*போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு*  வேலூர்: தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பெரும்பாலான அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளிமாநிலம் மற்றும் வெளியூர் பயணிகள் வசதிக்கென சாய்வு இருக்கைகள் கொண்ட சொகுசு பஸ்கள், ஏசி பஸ்களும் உள்ளூர் நகரங்களுக்கு சாதாரன பஸ்களும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் நடந்த நிர்வாக குளறுபடிகளால் பஸ்களுக்கான பராமரிப்பு பணிகள் முடங்கியது. இதனால் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.அரசு பஸ்களில் பயணிப்பதை தவிர்த்து தனியார் பஸ்களை நாடிச் சென்றனர். இதனால் அரசு பஸ்களின் மூலமாக கிடைத்த வருவாய் வெகுவாக குறைந்தது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒருசிலருக்கு தாமதமாக வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்

(33ஜ29.2)ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள் வைபவம்

ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் வைபவம் **********************      குரு கடாக்ஷம் ********************** ஒரு குருவின் கடாக்ஷம் நமக்கு கிடைப்பது மிகவும் அறிதானது.  ஶ்ரீமந் நாராயணனுக்கு ஆயிரம் கண்கள், பிரம்மாவிற்கு எட்டு கண்கள்  பரம சிவனுக்கு மூன்று கண்கள் இந்த மும்மூர்த்திகளின் கண்களில் இருந்து வரும் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஒரு குருவின் கண்களில் இருந்து வரும் அருள் கடாக்ஷம் உயர்ந்தது என்று வேதங்கள் கூறுகின்றன.  பகவானை அடைய எத்தனையோ மார்க்கங்கள் மற்றும் சம்ரதாயங்கள் உள்ளன.  ஒவ்வொரு சம்ரதாயத்தில் உள்ள உயர்ந்த கருத்துக்களை வைத்து உலக மக்களை நல்வழிப்படுத்த இறைவன்  நினைக்கிறார்.  ஒவ்வொரு மகான்களையும் ஆசாரியர்களையும் ஏதாவதொரு சம்ரதாயத்தில் வரவழைத்து அவர்களின் மூலம் பல உயர்ந்த விஷயங்களை உபதேசம் செய்ய வைத்து, அந்த சம்ரதாயத்தை பகவான் பிரகாசமடைய செய்கிறார்.  பகவானே ஒருசில ஆசாரியர்கள் வேறு சம்ரதாயத்தில் இருந்தாலும் அவர்கள் எந்த சம்ரதாயத்தில் இருந்தால் அவர்களின் பக்தியும் உபதேசமும் ஏற்றம் கானுமோ, அந்த சம்ரதாயத்தில் அவர்கள் வருவதற்கு பல வைபவங்களை நடத்தி இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டுகிறார்.  பகவானே அவர்

(32ஜ28.2)சௌராஷ்ட்ரா கல்டுரல் அகடமி விழா

சௌராஷ்டிரா கல்சுரல் அகாடமி மற்றும் தனலட்சுமி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் இணைந்து நடத்திய தேசிய சௌராஷ்டிர திருவிழா வழக்கம் போன்ற உற்சாகத்துடன்  26-1- 2020 அன்று  குடியரசு நாளன்று  தனலட்சுமி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது  . திருமதி தனலட்சுமி ராமமூர்த்தி அம்மாள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரபல தொழிலதிபர், சமூக ஆன்மீக சேவகர்,  திரு கே. கே.  தினகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி சேர்மன் திரு வி பி ராமமூர்த்தி அவர்கள் தலைமை உரை ஆற்றினார் தொழிலதிபர் பி விகே குரூப்பின், சேர்மன் திரு குட்டி வி பாலா, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் (மக்கள் M. P.)திரு ஏஜி.எஸ் ராம்பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் பத்திரிக்கைத் துறையில் இருந்து  மூத்த எழுத்தாளர் திரு வி என் சாமி அவர்களும் ஜூட்டிசன் ஆசிரியர் ஈஸ்வர் லால் அவர்களும் கலந்து கொண்டனர் பிரபல நரம்பியல் மருத்துவர் prof.Dr. K.R. சுரேஷ்பாபு அவர்களுக்கு  "மருத்துவ ரத்னா" விருதும், திரு K.R. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு "தொல்பொருள்  ஆய்வறிஞர்"விருதும் திருமதி  சரோஜினி ஜெகதீசன் குட்டின்

(31ஜ27.2)மாநகரப் பேருந்து தூய்மைப் பணியில் தனியார்

*ஆட்கள் பற்றாக்குறை, பயணிகள் புகார் எதிரொலி: மாநகர பேருந்து தூய்மை பணியில் தனியார்* சென்னை ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் 3,600 மேற்பட்ட பேருந்துகளை தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 765 வழித்தடங்களில் தினமும் சுமார் 3,600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும்சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புறநகர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஆனால், பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை இல்லை என்று புகார் கூறப்படுகிறது. மேலும் சில மாநகர பேருந்துகளில் குப்பைகள் கிடப்பதாகவும், பேருந்துகள் தூசு படிந்து காணப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சில நேரங்களில் சிதிலமடைந்த பேருந்து படிக்கட்டுகள், உடைந்தஜன்னல் கண்ணாடி சிதறல்களால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மநகர போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமானபேருந்துகளை தனியார் நிறுவனம் மூலம் தூய

(30ஜ26.2)இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்

*இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு* முதல் மனைவி விவகாரத்து பெற்றாலோ, இறந்து விட்டாலோ இரண்டாவது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் மொரப்பூா் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவா் டாக்டா் சின்னசாமி. இவா், தனது முதல் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருந்த போது, கடந்த 1975-ஆம் ஆண்டு சரோஜினி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தாா். சரோஜினி தேவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் சின்னசாமியின் முதல் மனைவி இறந்துவிட, கடந்த 1999-ஆம் ஆண்டு சின்னசாமி ஓய்வு பெற்றாா். சின்னசாமி தனது இரண்டாவது மனைவியை குடும்ப ஓய்வூதிய வாரிசுதாரராக நியமித்து விட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.இதனைத் தொடா்ந்து தனக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, சரோஜினி தேவி உள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்தாா். ஆனால், இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க ஓய்வூதிய விதியில் வழியில்லை எனக் கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சரோஜினி தேவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு ந

(29ஜ26.2)குடியரசு தின வாழ்த்துக்கள்

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......* *# முதல் வித்தியாசம்......* பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது., இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்.. *#இரண்டாவது   வித்தியாசம்......* சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உ

(28ஜ26.2)வருமான வரித்துறை எச்சரிக்கை

*ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை* ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை பிரதிநிதித்துவப்படம் புதுடெல்லி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வழங்காவிட்டால், அவர்கள் ஊதியத்தில் இருந்து வரியாக 20 சதவீதம் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 16-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையின் படி டிடிஎஸ்-ஆக 20 சதவீதம் ஊதியத்தில் இருந்து கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் பேமென்ட் மற்றும் வருவாயைக் கவனமாகக் கண்காணிக்கவே இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இந்தப் பிரிவில் நேரடி வரிவருவாயில் 37 சதவீதம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 16-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்ட 86 பக்க சுற்றறிக்கையில் " வருமான வரிச்

(27ஜ26.2)போக்குவரத்து தொழிலாளர்கள் கேள்வி?

*பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்தில் பிடிக்கும் இன்சூரன்ஸ் தொகை எதற்கு பயன்படுகிறது: போக்குவரத்து தொழிலாளர்கள் கேள்வி* புதுக்கோட்டை: புதுக்கோட்டை, அரசு போக்குவரத்து துறையில் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் இன்சூரன்ஸ் பணம் என்ன செய்யப்படுகிறது என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி. இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி உள்ளிட்ட 12 போக்குவரத்து பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்படட பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு போக்குவரத்து துறை தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணங்களை உயர்த்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்

(26ஜ25.2)என் எம் ஆர் சுப்பராமன் நினைவு நாள்

Image
இன்று 25ஜனவரி  2020  என்.எம். ஆர். சுப்பராமன்  37 வது நினைவு‌ ஆண்டுவிழா   (14 ஆகஸ்ட் 1905 - 25 ஜனவரி 1983)   அவர் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி.  அவர் மதுரை தொகுதியில் (1962-1967) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவரது காந்திய கொள்கைகளுக்காக அவர் "* மதுரை காந்தி *" என்றும் அழைக்கப்பட்டார்.  நாம் அனைவரும் அவரை நினைவில் கொள்வோம்

(25ஜ24.2)பென்ஷன் தாரர்களுக்கு 740 கோடி பாக்கி

*அரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி* அரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி மதுரை தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற 3655 பேருக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஏப். 2018 முதல் 2019 மார்ச் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.1093 கோடி பணப்பலன் பாக்கி சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இதில் 280-க்கு மேற்பட்டோர் தாமதமாக பணப்பலன் வழங்கியதற்கு வட்டி கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அரசு போக்குவரத்து கழகத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள் 3655 பேர் உள்ளனர். இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு நிதி, விடுப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் 520 பேர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்த

(24ஜ24.2)மெட்ரோ ரயில் நிலையங்களில் இ. பைக் அறிமுகம்

Image
மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்..... #நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்..... சென்னையில் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) என்ற இ-பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மக்களுக்கு தேவையான பல புதிய திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயக்கும் ஃப்ளை (FLYY) என்ற இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  ரூ.5 செலுத்தி புக்கிங் செய்துவிட்டு, ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டணத்தை செலுத்தி ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் எடுத்துச் செல்லலாம்.  சாவி இல்லாத இந்த இ-பைக், மொபைல் செயலி மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளலாம்.  வாகனத்தை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ள சூழலில் நிமிடத்துக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். காலை 7 மணி முத

(23ஜ23.2)க்யூ .ஆர். கோடு பஸ் பாஸ்

*சென்னை மாநகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த 'ஒருநாள் பஸ் பாஸ் திட்டம்' என்ன ஆனது..?* சென்னை மாநகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த ஒருநாள் பஸ் பாஸ் திட்டம் நிறுத்தப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகிறது. சென்னை மாநகரில் ஒருநாளில் எந்த பகுதிக்கும் சென்று வரக்கூடிய வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 50 ரூபாய் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. படித்து முடித்து சென்னையில் வேலை தேடி அலையும் பட்டதாரிகள், சொந்த வேலை விஷயமாக சென்னைக்கு வரும் வெளியூர்காரர்கள், மாநகர சுற்றிப் பார்க்க ஆசைப்படுபவர்கள் என பல தரப்பினருக்கும் இந்த ஒருநாள் பாஸ் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை தந்தது. 12 மணி நேரம் வரை பயன்படுத்தத்தக்க இந்த பஸ் பாஸ், சில காரணங்களால் கடந்த 2018ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஒருநாள் பாஸ் இல்லாததால் அதிக டிக்கெட் கட்டணத்தில் பயணம் மேற்கொள்வதாகவும், நாள்தோறும் 2 அல்லது மூன்று பேருந்துகள் மாறி செல்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர தமிழக போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

(22ஜன23.2)திருமலா திருப்பதி உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை இலவசம்

#திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)  நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.             *எப்படி அணுக வேண்டும்*                  பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல ம

(21ஜன23.2)கவிஞர் கண்ணதாசன் கட்டுரை

ஈ.வெ.ராமசாமி (பெரியார்) சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது. *(கவிஞர் கண்ணதாசனின்* *எண்ணங்கள் ஆயிரம்* *என்ற நூலிலிருந்து!)* நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன். ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது. நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது. குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது. என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு. இந்து மதத்தைப்போல்

(20ஜன21.20)சவுராஷ்டிரா சத்திரம்

..........பாதே சத்திரம்..........  அழகர் கோவில். மதுரை. மதுரையில், திருமாலிருஞ்சோலை என்னும், அழகர் கோவில், 108 திருப்தி களில் ஒன்றாகும் . இங்கிருக்கும் அழகர் தான் ,சித்திரை மாதத்தில், வைகையில் எழுந்து, அருள் பாலிக்கிறார். இங்கிருக்கும் பழமுதிர்சோலை ,முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்கிருக்கும் நூபுரகங்கை என்னும் தீர்த்த மலை, மருத்துவ குணம் கொண்டது. இங்கே தான் "பாதே சத்திரம்" அமைந்துள்ளது. இது ஸௌராஷ்ட்ர சத்திரம்.இச்சத்திரம் 04.05.1927  ல் கட்டப்பட்டது.  அன்று முதல்,  இங்கு நம் ஸௌராஷ்ட்ர மக்கள், இச்சத்திரத்தில் தங்கி, பற்பல விஷேசங்களை நடத்தி வருகின்றனர். இவ்வளவு பெருமைமிக்க இவ்வூரில், இரவில் தங்குவது மிகவும் விசேஷமாகும். இன்று , இச்சத்திரம் நவீன முறையில் புதுப்பித்து ,தண்ணீர் வசதி ,கழிப்பறை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ,புதுப் பொலிவுடன் திகழ்கிறது. எங்களின் பேத்தியின் ஜொவல் காதுகுத்து விழாவை இங்கு தான் நடத்தினோம். நாம் அனைவரும் இந்த சத்திரத்தில் தங்கி நம் வீட்டு விசேஷ,விழாக்கள் நடத்தலாமே! தொடர்புக்கு. பி.எஸ் .ஆர்.ஜெனார்த்தனன் பாபு. 9843268122. சத்திர மேலாளர்

(19ஜன20.20)கோவையில் கோயம்பேடு

*கோவையில் ஒரு கோயம்பேடு! ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்!* தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக கோவை மாவட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! மக்கள் தொகை அதிகம் உள்ள கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் வாகணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முந்தைய சட்டசபையில் விதி எண் 110- ன் கீழ் அறிவித்திருந்தார் எடப்பாடி. இந்நிலையில், அதனை செயல்படுத்த 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க நிதி ஒதுக்கி எடப்பாடி அரசு, தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையம் போல் மிகப்பிரமாண்டமாக அமையவுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 140 பேருந்துகளை நிறுத்த முடியும். புதிய பேருந்து நிலையம் கட்டப்

(18ஜன20.20)அரசு பஸ்களுக்கும் பாஸ்டேக்

*சுங்கச்சாவடியை கடக்கும் அனைத்து அரசு பஸ்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்*   சுங்கச்சாவடியை கடக்கும் அனைத்து அரசு பஸ்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்: தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை கடிதம்சென்னை: சுங்கச்சாவடியை கடக்கும் அனைத்து அரசு பேருந்துகளும் பாஸ்டேக் முறைக்கு மாறுவதை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மாதாந்திர பாஸ் திட்டம் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடக்கக்கூடிய கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ரொக்கப்பண பரிவர்த்தனைக்கு பதிலாக பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவது நாடு முழுவதும் கட்டாயமாக்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் இம்முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகத்தை பெருத்தவரையில் மாநிலம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை கடக்கக்கூடிய அரசு பேருந்துகள் மாதாந்திர பாஸ் திட்டத்தில் தான் சுங்கச்சாவடிகளை கடந்து வருகின்றன.இந்த அரசு பேருந்துகளும் பாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டாயமாக்கியிருக்கிறது. இதனை வலியுறுத்தி தமிழக அரசின் போக்கு

(17ஜன18.20)ஏசி பஸ்

*'ஏசி' பஸ் வருவாய் டீசலுக்கே போதவில்லை: மாற்று தடத்தில் இயக்க வலியுறுத்தல்* சேலம்: சேலத்திலிருந்து, கரூர், திருச்சி தடங்களில் இயக்கப்படும், 'ஏசி' பஸ்களின் வருவாய், டீசலுக்கே போதவில்லை என்பதால், மாற்று தடத்தில் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளன, மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது: சேலத்திலிருந்து, கரூர், திருச்சிக்கு இயக்கப்படும், 'ஏசி' புறநகர் பஸ்களின் வருவாய், டீசலுக்கு செலவு செய்யப்படும் தொகையை விட குறைவாக கிடைப்பதால், நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்களை, பயணியர் இடையே வரவேற்புள்ள, சேலம் - பெங்களூரு, மதுரை வழித்தடங்களில் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், சேலம், தர்மபுரி மண்டலத்தில், 'ஏசி' பஸ்களுக்கு பயணியரிடம் வரவேற்பு குறைவாக உள்ளது.தமிழக எட்டு கோட்டங்களில், 'ஏசி' பஸ்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறைத்து, புது டவுன் பஸ்களை, விரைவில் இயக்கத்துக்கு கொண்டு வரவேண்டும். அதன்மூலம், வருவாய் அதிகரிக்கும். குறிப்பாக, வருவாய் உள்ள வழித்தடங்களில், அதிகளவில் புது

(16ஜன14.20)சௌராஷ்டிரா எல் கே டி

கல்விக்கான மூலவர் எல் கே துளசி ராமன்..!  சென்னை மாகாணத்தின் தொழில்துறை அமைச்சராக இருந்த  வி.வி.கிரி, 1939 ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆலைத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தை (ஹார்விப்பட்டி) துவக்கி வைத்துப் பேசுகையில்  “எல்.கே.துளசிராமன் அவர்களின் மதிநுட்பத்தால் தொழில் வளத்தில் மதுரை சிறந்து விளங்குகிறது” என்கிறார். அதேபோல் 1956 ஆம் ஆண்டில் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நடைபெற்றது. சர் பி.டி.ராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று பேசுகையில் “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் இருவர் என்பேன். அதில் ஒருவர் எல்.கே.துளசிராம், மற்றவர் கோவை ஜி.டி.நாயுடு” என்று குறிப்பிட்டுப் பேசுகிறார்.       தொழில் நுட்பத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெள்ளைக்காரரான ஆல்பிரட் சாட்டர்டன் என்பவர் 1912ஆம் ஆண்டில் ‘இந்தியாவின் தொழில் வளர்ச்சி’ என்னும் தலைப்பில் தன் அனுபவங்களைத் தொகுத்து எழுதி புத்தகமாக வெளியிடுகிறார்.  அதில் குறிப்பாக மதுரையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, வாணிபம் மற்றும் விவசாயத் தொழில்களில் இன்றைக்கு மதுரை வளம் பெற்றிருப்பதற்கு காரணமானவர்கள் இருவர் என்று எழ

(15ஜன14.20) வல்லாரைக் கீரை

Image
வல்லாரையின் மருத்துவ குணங்கள் (Indian Pennywort Medical Benefits) வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும். வல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும். வல்லாரை சிறுசெடி ஆகும். சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் போன்ற அமைப்பு, கை வடிவாக விரிந்துள்ள இலை நரம்புகள், நீண்ட இலைக்காம்பு மற்றும் கணுவில் வேர்களைக் கொண்டு தரையில் படரும் வளரியல்பைக் கொண்டு வல்லாரையை இனம் காணலாம். வல்லாரை வேர்த் தண்டுகள் பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை. வல்லாரை பூக்கள், மிகச் சிறியவை, இளஞ்சிவப்பு நிறமானவை. ஒரு கொத்தில் தொகுப்பாக 3 முதல் 6 பூக்கள் வரை காணப்படும்.வல்லாரை பழங்கள், சிறியவை, 7-9 விளிம்புக் கோடுகளுடன் காணப்படும். ஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் கள

(14ஜன14.20) பழைய சோறு

பழைய சோறு! நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவை சாப்பிட்டதால் தான் வயதனாலும் வாலிபம் குறையாமல் இருகிறார்கள்.  அப்படி அவர்கள் உக்கொண்ட உணவுகளில் ஒன்று தான் பழைய சாதம். தற்போது பழைய சாதம் என்றாலே மூஞ்சியை சுருக்கும் இளையர்களிடம் தான் பன்றிக் காய்ச்சல், போன்ற பலவிதமான நோய்களும் பற்றிக்  கொள்கின்றது. பழைய சாதம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பு போன்றவை கிடைகின்றது. பன்றிக் காய்ச்சல் போன்ற எந்தக் காய்ச்சலும் அணுகாது. உடல் சூட்டை தணிப்பதோடு, குடல் புண், வயிற்று வலியும் குணமடையும். அலர்ஜி, அரிப்பு போன்றவையும் குணமடையும். சிறு குடலுக்கு நன்மைசெய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைக்கிறது.  கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேர்க்கும் போது நோய் எதிப்பு சக்தி அபரிதமாக பெருகுகிறது. அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன சாதாரண காய்ச்சல் கூட நம்மை அணுகாது. பழைய சாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன. மறு நாள் இதை குடிக்கும் போது உடல்சூடு தணிவதோடு, குடல்புண், வாயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்து

(13ஜன13.20)தினக் கூலியாக மாற்றி அரசுஉத்தரவு

*டிரைவர், கண்டக்டர்களை தினக்கூலியாக மாற்றி உத்தரவு: அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கண்டனம்* சேலம்: சேம டிரைவர், கண்டக்டர்களை பணி நிரந்தரப்படுத்தாமல், தினக்கூலியாக மாற்றி உத்தரவிட்டதற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.கடந்த, 2014, 2016ல் நியமித்த, சேம டிரைவர், 6,416 பேர், சேம கண்டக்டர், 6,486 பேரை, உடனடியாக பணி நிரந்தரம் செய்யக்கோரி, 2018 டிச., 6ல், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக பணியாளர் சம்மேளனம், வழக்கு தொடர்ந்தது. சென்னை, தொழிலாளர் துறை தனித்துணை ஆணையர் முன் நடந்த, பல கட்ட விசாரணை முடிவில், நிர்வாக இயக்குனர் எட்டு பேருக்கும், தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியும், பதில் மனுதாக்கல் செய்யவில்லை. இறுதியாக, 2019 டிச., 18ல் வழக்கு நடந்த நிலையில், பதில் மனுதாக்கல் செய்யாததால் வரும், 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், போக்குவரத்துத்துறை கடந்த, 6ல், சேம ஓட்டுனர், 1,828 பேர், நடத்துனர், 537 பேர், பணி மூப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்த, சேம ஓட்டுனர், 1,112 பேர், நடத்துனர், 162 பேரை, தினக்கூலி பணியாளராக மாற்றி உத்தரவிட்டது. இது, தொழிற்சங்கங்கள்,

(12ஜன13.20)கரூரில் புதிய நகர பேருந்துகள்

*கரூரில் 13 வழித்தடங்களுக்கு 15 புதிய நகரப் பேருந்துகள் இயக்கம்* கரூரில் 13 வழித்தடங்களுக்கு பல்வேறு கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ரூ. 4 கோடியிலான 15 புதிய நகரப் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். கரூா் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமையில் பேருந்துகளை தொடக்கிவைத்த அமைச்சா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். அப்போது அவா் தெரிவித்தது: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்படி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் சாா்பில் 5,000 புதிய பேருந்துகள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளனமேலும், 2,000 பேருந்துகள் புதிதாக இயக்கப்படும் என முதல்வா் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதன் அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்திய அளவில் தமிழகம் சாலை விபத்தில் உயிரிழப்புகளை குறைத்த மாநிலத்தில் முதல் மாநிலமாக உள்ளதால், இதற்கான விருது மத்திய அரசால் ச

(11ஜன13.20)சௌராஷ்ட்ரா சமூகத்தின் தந்தை

Image
பாரதியாரின் பாடல்களைத் தடையை மீறி சட்டசபையில் முழங்கியவரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென மதுரையில் உயர்நிலைப் பள்ளியை நிறுவி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும், மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும், நெசவாளர்களுக்கு தெருவில் பாவு நீட்டுவதற்கு உரிமை பெற்றுத்தந்தவரும், சௌராஷ்ட்ர சமூகத்தின் தந்தையுமான "' *ராஷ்ட்ரபந்து*  *L. K. துளசிராம் B.A.B.L.,* அவர்களின் *150* வது பிறந்தநாள் கொண்டாட அன்புடன் 14.ஜனவரி2020 அழைக்கின்றோம்.

(10ஜன12.20)தற்காலிக பேருந்து நிலையம்

*சென்னையில் தற்காலிகமாக 6 பேருந்து நிலையங்கலிருந்து எங்கு எங்கு செல்லலாம்.!*  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் சென்னையிலிருந்து இரண்டரை லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய ஆறு இடங்களில் இருந்து 14 ம்தேதி வரை வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 950 சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. பொங்கல் விடுமுறைக்காக 16 ஆயிரத்து 75 பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று(11ம் தேதி சனிக்கிழமை) இரவு 10 மணி நிலவரப்படி 5,378 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 795 பயணிகள் வெளியூர்களுக்கு பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பொங்கலுக்கு முன்பதிவு செய்த பயணிகள் மூலமாக அரசுக்கு 9.12 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. தேதி :12.01.2020

(9ja10.20) குளிர்சாதனப் பேருந்து

*மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதன பேருந்துகளின் இயக்கம் சென்னையில் இன்று முதல் தொடங்கியுள்ளது.*  *கோயம்பேடு-சிறுசேரி வரையில் இயக்கப்படும் குளிர்சாதன பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*  *தாம்பரம்-திருவான்மியூர் வரையில் இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்சமாக 15 ரூபாயும், அதிகபட்மாக 45 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*  *இந்நிலையில், எஞ்சியுள்ள 46 குளிர்சாதனப் பேருந்துகளும் பின்வரும் வழித்தடங்களில் விரைவில் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.*

(8ஜன10.20)நெசவாளர்களுக்கு மதிப்பு கொடுங்கள்

கைத்தறியின் ஒலி கேட்டவனுக்கு தெரியும் நெசவாளியின் வலி!  நெய்தவன் பிச்சைக்காரன்...!! விலைக்கு வாங்கியவன் இலட்சக்காரன்...!! இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் நெய்த சேலை, வேட்டி மற்றும் லுங்கியை ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! இப்படிக்கு:  நெசவாளி குடும்பங்கள்.  நெசவாளிகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

(7ஜன10.20/போக்குவரத்து தொழிலாளி மாத இதழில்கட்டுரை

சேம நல பணியாளர்கள் - பணி நிரந்தரமும்,  480 நாள் பணி நிரந்தரம் சட்டமும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சேமநல பணியாளர்களாக கழகங்களில் பணி அமர்த்தப்பட்டனர்.  இவர்களில் பலர் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.  கடந்த இரண்டு ஆண்டு காலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டு அதன் காரணமாக தொழிலாளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் காலி பணியிடங்கள் இல்லை என அறிவித்து, நிர்வாகம் 240 நாள் தினக்கூலி உத்தரவு கூட வழங்க மறுத்து வந்தன.  இதையொட்டி போக்குவரத்து கழகங்களில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன இந்த சூழலில் கழக நிர்வாகங்கள் சேம நல பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட 2015 ஆம் ஆண்டில் இருந்த பணியாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்படும் காலி பணியிடங்கள் அடிப்படையில் சேம நல பணியாளர்களுக்கு 240 நாள் தினக்கூலி உத்தரவு வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது அரசின் அனுமதி பெறும் நிலையில் உள்ளது.  2015ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 2020 இல் தான் 240 நாள் தினக்கூலி உத்தரவு வழங்கி, அதன்

(6ஜன6.20) மின்சார பேருந்துகள்

*காற்று மாசை குறைக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்* சென்னை: தமிழக அரசு முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 525 மின்சார பேருந்துகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் பயணக்கட்டணம், காற்று மாசு குறையும் என்று சொல்லப்பட்டாலும், முறையான வழித்தடங்களை அமைப்பது அவசியம் என்ற கருத்தும் நிலவுகிறது. தமிழகத்தில் மினி பேருந்துகள், ஏசி பேருந்துகள், படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இந்த வரிசையில் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. எரிபொருள் சிக்கனத்திற்காகவும், சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும் மின்சார பேருந்துகளை இயக்கவுள்ளனர். முதல்கட்டமாக சென்னையில் 125 பேருந்துகள், திருச்சி, கோவை மற்றும் மதுரையில் தலா 100 பேருந்துகள்.ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 25 பேருந்துகள் என மொத்தம் 525 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து, நடைமுறைக்கு வரவுள்ள பேருந்துகளின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் சென்னை பாரிமுனை முதல் கோயம்பேடு வரையிலும், சிறுசேரி வழித்தடத்திலும் நடைபெற்று வருகிறது. இந்நி

(5ஜன6.20) சொர்க்கவாசல் திறப்பு

வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு   மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி. இந்த நன்நாளில் விஷ்ணுவை வணங்கினால், கேட்ட வரம் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். பரமபத சொர்க்க வாசல் வழியாக பெருமாளை கண்டு தரிசித்தால், வாழ்வில் பிரச்சினை தீரும், வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பெருமாள் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது. சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிவிக்க அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் காத்திருந்தனர்.  *சென்னை* திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் காத்திருந்த பக்தர்கள், பார்த்தசாரதியை கண்டதும், கோவிந்தா... கோவிந்தா என முழக்கம் எழுப்பி வழிபட்டனர். *ஸ்ரீரங்கத்தில்* சொர்க்க வாசல் திறக்கப்பட்டது இதேபோல, திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ரெங்கநாதரை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். *மதுரை* தல்லாகுளத்தில் சொர்க்க வாசல் திறப்பு வைகுண்ட

(4ஜன6.20) வேஷ்டிகள் வாரம்

சர்வதேச வேட்டி நாள் இன்று : சனவரி '06 பாரம்பரிய வேட்டி நாள் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி நாளை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதில் விருப்பம் காட்டுவது இல்லை. மாறி வரும் தற்கால சூழலுக்கேற்ப தங்கள் உடைகளை மாற்றி வருகின்றனர். அதில் இளைஞர்கள், யுவதிகள் நவநாகரீக உடைகளை ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வருகின்றனர். நாகரீக உடைகளை நாடும் தலைமுறை கல்லூரிகள், விழாக்கள் உள்ளிட்ட பல விசேஷங்களிலும் நவ நாகரீக உடைகளுடன் வலம் வரும் பலரை நாம் அதிகமாக காணமுடிகிறது. இந் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அங்கீகரிக்கும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் ஜனவரி 6 ம் தேதியை சர்வதேச வேட்டி நாளாக அறிவித்தது. நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இன்று வேட்டி நாள் கொண்டாடப்படுகிறது.  நானும் ஓர் நெசவாளன் என்பதை எண்ணி பெருமை கொள்கின்றேன்.  இந்நாளில் நெசவாளர் அனைவர

(3ஜன7.20)சிறப்பு பஸ்கள்

*பொங்கல் பண்டிகையில் போக்குவரத்து கழக வருவாய் இலக்கு ரூ.120 கோடி! சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டம்* போக்குவரத்துக்கழகங்களில், புது பஸ்களின் வருகையால், பொங்கல் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி, வருவாயை, 120 கோடி ரூபாய் வரை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், எட்டு கோட்டங்கள் சார்பில், 22 ஆயிரத்து, 773 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அப்போது, சென்னையிலிருந்தும், தொழில் நகரங்களிலிருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் வசதிக்கு, ஆண்டுதோறும் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. கடந்த, 2019ல் சென்னையிலிருந்து, சொந்த ஊர் செல்லும் பயணியரின் எண்ணிக்கை ஆறு லட்சம், தொழில் நகரங்களிலிருந்து செல்வோரின் எண்ணிக்கை, எட்டு லட்சமாக இருந்தது.நடப்பாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுப்பு நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னை பயணியரின் எண்ணிக்கை எட்டு லட்சம், தொழில் நகர பயணியர் எண்ணிக்கை, 10 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றன

(2ஜன3.20) சௌராஷ்ட்ரா சபை

பரமக்குடி    ஸௌராஷ்டிர ஸபை 💐30.12.2019 அன்று நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில், பரமக்குடி ஒன்றியம், உரப்புளி ஊராட்சி தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நம் சமூகத்தவர் , திருமதி. நாகலட்சுமி ரவீந்திரன், சுந்தர் நகர் வார்டு உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ள நம் சமூகத்தவர்கள், பி.பி.விஜயலட்சுமி எஸ்.ஆர்.மல்லிகா ஏ. ஆர்.அசோக்குமார் டி.ஜி. லட்சுமிகாந்தம் 💐தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி, சோமநாதபுரம்   வார்டு உறுப்பினர்கள், வி.எம்.அழகர்சாமி எஸ்.கே.ஸ்ரீதேவி பி.என்.தனஞ்சயன் கே.கே.ராஜீவ்காந்தி 💐வேந்தோணி ஊராட்சி, குமரக்குடி வார்டு உறுப்பினர், ஏ. சி.வாசுதேவன் ஆகியோரை, 💐பரமக்குடி ஸௌராஷ்டிர ஸபையின் சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அனைவரின் பணியும் சிறப்பாக அமைய ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாளின் திருவருளை வேண்டுகிறோம்.

(1.ஜன3.20) அறவழிப் போராட்டம்

*உண்ணாவிரத போராட்ட அழைப்பிதழ்*  அனைவருக்கும் வணக்கம். 04.01.2020 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 3 மணிவரை.  கும்பகோணத்தில் நடைபெறஉள்ள சௌராஷ்டிர மத்திய சபைக் தலைவர் S.R.ஸ்ரீராம்சேகர். செயலாளர்.NSR சாந்தராம். பொருளாளர்.T.R.சுரேந்திரன்.( பாபு  )ஆகிய மூவ்வரும் செய்த தவறுகளை உணர்ந்து பதவி விலக கோரி *மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.* கும்பகோணத்தில் மகாமக குளத்தில் அருகில் உள்ள தென்கரையில் நடைபெறுகின்றது.  இந்த *உண்ணாவிரத போராட்டத்தில்* கும்பகோணத்தில் உள்ள சௌராஷ்டிரர் சமூக பெரியோர்கள். நண்பர்கள் இளைஞர்களும். அருகிலுள்ள திருபுவனத்தில் இருந்தும் நமது சௌராஷ்ட்ர சமூக பெரியவர்கள். இளைஞர்கள் இளைஞர்களும். மற்றும் தாராசுரம் அய்யம்பேட்டை இல் உள்ள நமது சௌராஷ்டிரா சமூகப் பெரியவர்கள் நண்பர்கள் இளைஞர்கள் அனைவரும் திரளாக இந்த *உண்ணாவிரத போராட்டத்தில்* கலந்து கொள்ள வேண்டுமாய் *பாண்டவர் குழு* சார்பாக உங்களை அன்போடு அழைக்கின்றோம். மேலும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊர்  சௌராஷ்ட்ரர் பெருமக்கள்  EC உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். தங்கள் அன்புள்ள. *பாண்டவர் குழு* N.K. *ராமஜெயம்* EC.உ.சென்னை. குப்பல் G