Posts

Showing posts from November, 2019

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம்

*காலதாமதமாகும் 14வது ஊதிய ஒப்பந்தம்  வேதனையில் போக்குவரத்து தொழிலாளர்கள்*  14 வது ஊதிய ஒப்பந்தமும் தாமதமாகி வருவது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை வேதனைக்குள்ளாக்கியுள் ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் சமூகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முறை 1977 ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. ஆனால், 1998 ஆம் ஆண்டு க்கு பிறகு பெரும்பாலும் போராட்டங்களுக்கிடையே தொழிலாளர்களுக்கு  திருப்திகரமற்ற நிலையிலேயே இந்த ஒப்பந்தம் முடிக்கப்படுகிறது இதனால், 2013, 2016 ஆம் ஆண்டுகளில் இந்த ஊதிய ஒப்பந்தம் காலம் வந்தபோது போராட்டம் . உச்ச கட்டத்தை எட்டியது. ஆனால், ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டதே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குறை தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த 2016 செப் 1ம் தேதி முதல் அமுலுக்கு வரவேண்டிய 13வது  ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தின.  இதில், மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல போக்குவரத்துக்  தொழிலாளர்களுக்

வாடகை மகிழுந்து ஒழுங்குபடுத்த புதிய விதிகள்

*ஓலா, உபேரை ஒழுங்குபடுத்த புதிய விதிகள்!* பயணக் கட்டண கமிஷன் - தற்போது  20% - இனிமேல் 10% பீக் அவர் கட்டணம் - தற்போது  4 - 5 மடங்கு -  இனிமேல் 2 மடங்கு  ஒரு ஓட்டுநர்,நாள் ஒன்றுக்கு பத்து சதவீத டிரிப்புகளுக்கு மட்டுமே பீக் அவர் கட்டணம் வசூலிக்கலாம். ஓட்டுநர்கள் புக்கிங்கை தன்னிச்சையாக கேன்சல் செய்தால் நூறு ரூபாய் அபராதம். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புக்கிங்கை கேன்சல் செய்தால் 2 நாட்களுக்கு சேவை கிடையாது. ஆப் மூலமாக புக் செய்து, பாதியிலேயே கேன்சல் செய்தால் தற்போது ரூ.50 வசூல். ஆப் மூலம் புக் செய்து ரத்து செய்தால் இனி ரூ.100 ரூபாய் வரை உயர்வு. 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது. பயணிகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கட்டாயமாகும். மாநில அரசுகள் விரும்பினால், ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மேல் வரி விதிக்கலாம்.

சுங்கச்சாவடி ஃபாஸ்டேக் கை எங்கு வாங்குவது?

சுங்கச்சாவடி ஃபாஸ்டேக்-கை எங்கு வாங்குவது?... கட்டணம் செலுத்துவது எப்படி *இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக FASTag டிஜிட்டல் முறை வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாகும் நிலையில் ஃபாஸ்டேக்-கை எங்கு வாங்குவது? ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி?*   *சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.*  *இந்தத் திட்டத்தின் மூலமாக, டிஜிட்டல் முறையில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படப் போகிறது. டிசம்பர் 1ஆம் தேதிக்கு மேல் ஃபாஸ்டேக் இன்றி ரொக்கமாக சுங்கக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு 2 மடங்கு அபராதம் என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் பதறிப்போய் இருக்கிறார்கள்.*   *இந்த ஃபாஸ்டேக் என்பது பிரத்யேக தகவல்களைக் கொண்ட ஒரு அட்டை. ரேடியோ அலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட RFID தொழில்நுட்பத்

சொகுசு பஸ்கள் தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது

*நீண்ட தூரம் பயணிப்போரை மகிழ்விக்க விரைவில் 'ஸ்கேனியா' பஸ்கள் இயக்கம்* சேலம்: நீண்ட தூரம் பயணிப்போரை மகிழ்விக்க, புது வரவாக, 'ஸ்கேனியா' சொகுசு பஸ்கள் இயக்கத்துக்கு வரவுள்ளன.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 25 பணிமனை மூலம், 1,087 தடங்களில், 1,170 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கடந்த எட்டாண்டில் வழங்கப்பட்ட, 615 புது பஸ்களால், 70 சதவீதத்துக்கு மேல், புது பஸ்களுடன் இயங்கும் போக்குவரத்து கழகமாக எஸ்.இ.டி.சி., உள்ளது. தற்போது, அல்ட்ரா டீலக்ஸ், குளிர்சாதன இருக்கை பஸ், குளிர்சாதன படுக்கை வசதி பஸ், கிளாசிக் பஸ்கள் (கீழ் பகுதி இருக்கை, மேற்பகுதி படுக்கை), குளிர்சாதன வசதியற்ற படுக்கை வசதி பஸ்கள், கழிப்பிடம் உள்ள பஸ்கள் என, தனியார் ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக, நவீன பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், 2020 - 21 நிதியாண்டில், 300 புது பஸ்கள் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதில், புது வரவாக, ஸ்கேனியா (குளிர்சாதனம், சொகுசு இருக்கை, அதிவேகத்தில் செல்லக்கூடியது) பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வர, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை முதல் சோதனை முறையில் இயக்க, பின்,

பஸ்களை தூய்மையாக பராமரிக்க டிரைவர் கண்டக்டர் புது முயற்சி.

புது பஸ்களை, தூய்மையாக பராமரிக்க, டிரைவர், கண்டக்டர் மேற்கொண்ட நடவடிக்கை, பயணியரிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக போக்குவரத்துக்கழகங்களுக்கு, 2012 முதல், 2019 மார்ச் வரை, 12 ஆயிரத்து, 153 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020 பிப்ரவரிக்குள், மேலும், 2,000 பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டு வரும் பணி நடக்கிறது. இதுதவிர, மலைப் பிரதேசங்களுக்கு, 208, சென்னை உள்பட பிற நகர பயன்பாட்டுக்கு, 300 மினி பஸ்கள் இயக்கத்துக்கு வந்துள்ளன. ஆனால், இதை பராமரிக்க, சிறு அளவில் பழுதுநீக்க, தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 2011ல், தொழில்நுட்ப பணியாளர், 12 ஆயிரத்து, 200 பேர் பணிபுரிந்த நிலையில், தற்போது, 8,700 பேர் மட்டும் உள்ளனர்.பகலில் இயங்கும் பஸ்கள், இரவில், பணிமனைக்கு வரும் நிலையில், அதிலுள்ள குப்பையை கூட அகற்ற பணியாளர் இல்லை. இதனால், பல்வேறு பணிமனைகளில், துப்புரவு பணியாளர் மேற்கொள்ளும் பணியை, டிரைவர், கண்டக்டர் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், கோவை, விழுப்புரம் கோட்ட டிரைவர், கண்டக்டர்கள், பயணியருக்கு கோரிக்கை விடுத்து, பஸ்களின் முன்புறம், உட்புற இருக்கைகளில், 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளனர். அதில

போக்குவரத்துத் துறைச் செயலாளர் தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2,000 புதிய பேருந்துகள்:   அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.600 கோடியில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என போக்குவரத்து துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை செயலர் டாக்டர் பி.சந்திரமோகன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் கடந்த 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், சென்னை, விழுப்புரம், கோவை உட்பட 8 போக்குவரத்து கழகங்களை சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது, போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், செலவினங்கள், நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல் ஊழியர்களின் பதவி உயர்வு, பழைய பேருந்துகள் நீக்குவது, பேருந்துகளின் இயக்கம் மற்றும் வருவாய் உள்ளிட்டவை குறித்து இதில் விரிவாக பேசப்பட்டன.இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலர் பி.சந்திரமோகன் பேசியதாவது:போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,442 கோடி செலவில் 4,802 பதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஏசி, படுக்கை

போக்குவரத்து கழகங்கள் நேரடி அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டுமே மற்ற அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இல்லாத பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.       முதல் பாதிப்பு  ESI மருத்துவத் திட்டம் நிறுத்தப்பட்டதிலிருந்து தொடங்கியது.  சுமார் 1985-ம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் வெவ்வேறு பெயர்களில் இருந்த அரசு போக்குவரத்து கழகங்களும் (பல தொழில் சங்கங்களின்  நிர்ப்பந்தத்தால்) ESI திட்டடத்திற்கு பணம் பிடித்தம் செய்யாமல் அதிலிருந்து வெளியேறியது.           இதனால் ESI க்கு ஒரு தொழிலாளியிடம் மாதம் ஒன்றுக்கு சம்பளத்தில் சுமார் ரூபாய் 40 வரை பிடித்தம் செய்வது நிறுத்தப் பட்டது, அதற்கு பதிலாக Health Allowance ஆக சுமார் ரூபாய் 140 வரை சம்பளத்துடன் உயர்வாக வழங்கப்பட்டது. இதுவே அப்போதைய நிலையில் தொழிலாளிகளுக்கு இலாபமாக தெரிந்தது.         அப்போது எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பயனுள்ள ESI திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் பேசாமல் பின்னர் வெகு ஆண்டுகளுக்கு பிறகு தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டம் புகுத்தப்பட்டதும் சில தொழிற்சங்கங்கள் குறைகூறியது காலம் தவறிய செயலாய் போனது.        அக்காலகட்டத்தில் கழக மருத்துவ விடுப்

பேருந்து ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்கி 7,888 போ இறந்துள்ளனா். இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநா்கள், பணியின் போது ஓட்டுநா்களுடன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஓய்வு நேரத்தினை ஓட்டுநா்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், டிவிட்டரில் செலவிடக்கூடாது எனவும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. இதே போல் பேருந்தில் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என நிா்வாகம் தொடா்ந்து கூறி வருகிறது. இதற்காக மட்டும் கடந்த 2014 முதல் 2018 வரையிலான ஆண்டுகளில், 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் மீது மாநகர போக்குவரத்துக்கழக நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் பணியின் போது ஓட்டுநா்கள் செல்லிடப்பேசியில் பேசியபடி பேருந்தை இயக்குவதாக பயணிகள் தொடா் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்

ரயில்வே டிக்கெட் எடுக்க இனி வரிசையில் நிற்க வேண்டாம்

நமது இரயில்வே துறை UTS எனும் APPLICATION யை அறிமுகப்படுத்தியுள்ளது .இதன் மூலம் நாம் வீட்டிலிருந்தபடியே அனைத்து முன்பதிவில்லாத இரயில்வே டிக்கட்டையும் Online மூலமாகவே எடுத்து விட்டு நாம் செல்ல வேண்டிய ரயிலை சிரமமின்றி பிடிக்கலாம்.  டிக்கட் பரிசோதகர் வந்தால் நமது செல்போனில் நாம் எடுத்த ஆன்லைன் டிக்கெட்டை காட்டினால் போதும். நிபந்தனைகள்.. 1) டிக்கெட் புக் செய்யும் போது நமது Locationயை ஆன் செய்தி ருக்க வேண்டும். 2) தண்டவாளத்திலிருந்து 25 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்.இதனால் இரயில்வே பிளாட்பாரத்திலோ அல்லது ரயிலின் உள்ளே இருந்தோ டிக்கெட் புக் செய்ய இயலாது. 3) சம்மந்தப்பட்ட இரயில் நிலையத்திலிந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். 4) Uts app மூலம் எடுத்த டிக்கெட்டை செல்போன் மூலம் Screen shot எடுக்க இயலாது. இதனால் முறைகேடாக மற்றவருக்கு அனுப்ப இயலாது. மேலும் இந்த செயலி மூலம் மாதாந்திர Season டிக்கெட்டும் எடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

RTI தலைமை நீதிபதியும் இடம் பெற வேண்டும்

தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும். அவருக்கு விதி விலக்கு அளிக்கப்படக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2010-ல் ஆர்.டி.ஐ. ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 'உச்ச நீதிமன்றம் என்பது எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் ஒருவரின் நலனுக்காக மக்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது. அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே தகவல் அறியும்

போக்குவரத்துக்கழக வழக்கு முடிந்து விட்டது.

உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்க தேர்வு வழக்கு இன்று நடந்தது அரசு தரப்பில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கும் நிலையில் உள்ளோம் 31 ஆகஸ்ட் 2019 இல் போக்குவரத்து கழகங்களில் பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் சங்கங்களை அழைக்க முடிவு செய்துள்ளோம் என ஏஜி கடிதம் கொடுத்தார். அதை அப்படியே நீதிமன்றம் ஏற்று வழக்கை முடித்து வைத்தது பேச்சுவார்த்தையைத் துவக்கலாம் என கூறிவிட்டது .2019 ஆகஸ்ட் முன்னர் ஒரு சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.செய்தி தொகுப்பு ரங்காராவ் நாள் 7 நவம்பர் 2019

போக்குவரத்து கழகத்தை சீரமைக்க 1600 கோடி நிதி உதவி

தமிழக போக்குவரத்துத்துறையை சீரமைக்க 1600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜலா மெர்க்கல் நேற்று அறிவித்தார். ஏற்கனவே 'குளுகுளு வசதி பஸ்கள், படுக்கை வசதி பஸ்கள், மின்சார பஸ்கள்' என அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜெர்மன் நிதி உதவியால் பளிச்சிடும் பஸ்களுடன் அரசு போக்குவரத்து கழகத்தின் சேவையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம், மதுரை, கும்ப கோணம், சேலம், கோவை என ஐந்து மண்டலங்கள் உள்ளன. இவை தவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்கு வரத்து கழகம் ஆகியவை தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இரண்டு இயக்குனர்களின் கீழ் செயல்பட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் 22 ஆயிரத்து 203 பஸ்கள் உள்ளன; 1.31 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போக்குவரத்து கழகம் குறைந்த பயணிகளே பயன் பெறும் குக்கிராமங்களுக்கும் சேவை மனப்பான்மையுடன் பஸ்களை இயக்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 20

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் செய்தி. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப் போது கோர்ட்டில் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தாலும் 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 9 தொகுதி களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தாலும் அதில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் 3-ல் கூடுதல் ஓட்டுகளை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது ஆளும் கட்சிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தலையும்

தமிழக போக்குவரத்து துறையை சீரமைக்க ஜெர்மன் பிரதமர் நிதியுதவி

இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜலா மெர்க்கல் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் தமிழக போக்குவரத்துத் துறையை சீரமைக்க 1600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் ஜெர்மன் நிதி உதவியால்  அரசு போக்குவரத்து கழகத்தின் சேவையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம் மதுரை கும்பகோணம் சேலம் கோவை என ஐந்து மண்டலங்கள் உள்ளன .இவை தவிர ,சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என தனித்தனியே செயல்பட்டு வருகின்றன, இந்த கழகங்கள் ஒருங்கிணைத்து இரண்டு இயக்குனர்களின் கீழ் செயல்பட வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் 22 ஆயிரத்து 703 பஸ்கள் உள்ளன 1.31 லட்சம் பேர் பணிபுரிகின்றனர் .போக்குவரத்து கழகம் குறைந்த பயணிரே பயன்பெறும்  கிராமங்களுக்கும் சேவை மனப்பான்மையுடன் பஸ்களை இயக்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது கடந்த 2017   பதினெட்டாம் ஆண்டு நிதி ஆண்டு நிலவரப்படி போக்குவரத்து கழகம் 7304 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு போக்குவரத்துக்கழக அற

பிஎப் சந்தாதாரர்களுக்கு புது வசதி அறிமுகம்

*பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்* புதுடில்லி: பி.எப்.பில் பணம் எடுக்க யு.ஏ.என். எண்ணிற்காக, பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்க தேவையில்லை, இனி நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம். இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதில் தொழிலாளரின் பி.எப்., எண் மாறும், அவர் எத்தனை நிறுவனம் மாறினாலும், அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மாறாது. தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண், ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த நம்பர் தான் அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.இந்நிலையில் மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பின் 67 வது தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போதுஇ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். அதில் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என்.