Posts

Showing posts from July, 2019

அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

https://youtu.be/QaM3LrMgaUA

இஞ்சி குழம்பு Inchi kuzhambu.

இஞ்சி குழம்பு Inchi kuzhambu   தேவையான பொருட்கள். துவரம் பருப்பு - 2 ஸ்பூன் கடலை பருப்பு - 2 ஸ்பூன் சாம்பார் பொடி - 2 ஸ்பூன் வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை.: முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்

சிதம்பரம் ரகசியம் the secret of chidabaram

சிதம்பரம் ரகசியம் The Secret of Chidambaram பஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அதில் ஆகாய ரூபமாகத் திகழ்கிற தலம் தான் சிதம்பரம். இங்கே உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதாவது ஆனந்த தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவ நிலை,சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமை பார்வதியும் காட்சிதருவது அருவுருவ நிலை, அடுத்து அருவமாகத் தரிசனம் தருவது தான் சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில் ஆடல் வல்லாரின் வலப்பக்க சுவற்றில் சக்கரம் இருக்கும் இடம் தான் இது. இதைத் திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம். சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாகத் திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பட்ட தலம் இது. நான்கு வேதங்களோடு விழுப்பொருள், அண்ட சராசரங்களோடு முழு முதற்பொருள் ஆகியவற்றைக் குறிக்கிறது தான் அருவ நிலை. அதனால் தான் இந்தத் தலத்துக்கு சிதம்ப

கோதுமை குருணை பாயாசம் gotumai kurunai payasam.

கோதுமை குருணை பாயசம் gotumai kurunai payasam தேவையானவை கோதுமை குருணை – 2 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு லிட்டர், மில்க் மெய்ட் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் துண்டுகள், திராட்சை (சேர்த்து) – ஒரு டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை செய்முறை கோதுமை குருணையுடன் சிறிதளவு நெய் சேர்த்து கடாயில் சிவக்க வறுக்கவும். இத்துடன் அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். மீதமுள்ள நெய்யை கடாயில் விட்டு முந்திரி, பாதாம், திராட்சையை சிவக்க வறுத்தெடுக்கவும். மீதமுள்ள அரை லிட்டர் பாலை இதே கடாயில் ஊற்றி, வற்றக் காய்ச்சி, மில்க்மெய்ட் சேர்த்துக் கலக்கவும். வெந்த கோதுமை குருணையை இதனுடன் சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்துள், முந்திரி, பாதாம், திராட்சை கேசரி பவுடர் கலந்து, சூடாக அருந்தக் கொடுக்கவும்.

சௌராஷ்ட்ரா இவர்களுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரைப்பயணம்.

https://youtu.be/gec14S39ouM

சௌராஷ்ட்ரா இவர்களுடன் ‌புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.திரைபயணம்.

சௌராஷ்டிரார்களுடன்,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.திரைபயணம் .அச்சம் என்பது மடமையடா' பாடல், மன்னாதி மன்னன் படத்தில் வரும். இசை எம் எஸ் வி ராமமூர்த்தி பாடல் கண்ணதாசன் பாடியவர் டி எம் எஸ் சௌந்தரராஜன். எம்ஜிஆர் நடித்த சுமார் 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன் .அவரின் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா பாடல் எம்ஜிஆர் க்கு எப்போதும் பிடிக்கும்,அவரது காரில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படம் முதலில் வெளிவந்ததிலிருந்து , 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.பின்பு, தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள் தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக எம்ஜிஆர் விளங்கினார்.. எம்ஜிஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற படம் மலைக்கள்ளன் ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இந்தியாவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம். நம்பியாரும் அசோகனும் தான் எம்ஜிஆருக்கு பிடித்த வில்லன்கள் பி. எஸ் .வீரப்பா வும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார். எம்ஜிஆர் அதிக படங்களில் ஜோ

கொள்ளு கேரட் துவையல் kollu carrot tuvaiyal.

கொள்ளு கேரட் துவையல் kollu carrot thuvaiyal தேவையானவை கொள்ளு - 20 கிராம், வெங்காயம் - 1 கேரட் துருவல் - 1 கப், பூண்டு - 4 பல், உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி, கடலை பருப்பு - 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் -10, கடுகு-தேவையான அளவு, கறிவேப்பிலை-தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை : கழுவிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம், கேரட் துருவல் மற்றும் பூண்டை போட்டு நனறாக வதக்கவும். பின்பு, தனியாக கடாயில் காய்ந்த மிளகாய், கொள்ளு, மற்றும் பருப்புவகைகளை இட்டு தனியாக வறுக்கவும். அது ஆறியவுடன் அதனுடன் வதங்கிய பூண்டு, கேரட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனை கடுகு உழுதாமபருப்பு சேர்த்து தாளித்து எடுத்தால், சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி!!

Bombay chutney பாம்பே சட்னி

பாம்பே சட்னி Bombay chutney தேவையான ப்பொருட்கள்.    : கடலைப்பருப்பு.    : 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய்.  : 2 மிளகாய் வற்றல்.  : 2 வெங்காயம்.      : 1(பொடியாக நறுக்கவும்) தக்காளி.       : 1 தேங்காய் துருவல்.  : 1 டேபிள்ஸ்பூன் கடுகு.     : 1 டீஸ்பூன் உளுந்து.   : 1 டீஸ்பூன் கறிவேப்பிலை.  : சிறிது கொத்தமல்லி.    : சிறிது செய்முறை.  : கடலைப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலைப்பருப்பு தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். . கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். சீக்கிரம் கெட்டி தன்மை வரும். அப்போது இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பூரி சென்னா மசாலா poori chennaa masala

சென்னா மசாலா poori chennaa masala தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டக்கடலை.   : 100 கிராம். வெங்காயம்.       : 2 தக்காளி.         : 2 பச்சை மிளகாய்.  :2 இஞ்சி பூண்டு விழுது.  : 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன் தனியாத்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்.    : 1 டீஸ்பூன் கரம் மசாலா.      : 1 டீஸ்பூன் சீரகத்தூள்.       : 1 டீஸ்பூன் தயிர்.       : 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை.   : சிறிது புதினா.     : சிறிது கஸ்தூரி மேத்தி.   : சிறிது (தேவைப்பட்டால்)   செய்முறை.  : வெள்ளைசுண்டலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வானலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயவிழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரைவதக்கவும். பின்ன

Suntaikkay pachati சுண்டைக்காய் பச்சடி

சுண்டைக்காய் பச்சடி தேவையானவை    சுண்டைக்காய் 1 கப்   துவரம்பருப்பு        அரை கப்   வெங்காயம் 2     தக்காளி 1 பச்சை மிளகாய் 3   புளி எலுமிச்சம் அளவு   கடுகு கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு        அரை டீஸ்பூன் சோம்பு கால் டீஸ்பூன் மஞ்சள்த்தூள்         கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்        ஒரு சிட்டிகை எண்ணெய்/உப்பு        தேவையான அளவு செய்முறை முதலில் சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். பிறகு துவரம்பருப்புடன் மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு ஆகியவை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், சுண்டைக்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுண்டைக்காய் நன்கு வதங்கியதும், அதில் புளித் தண்ணீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும். சு

அரிசி ஆவி உருண்டை arisi aavi urundai

புழுங்கலரிசி ஆவி உருண்டை தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், நல்லெண்ணெய், உப்பு - தேவை யான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக் கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் நேரத்தில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை  உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

சௌராஷ்டிரா எழுத்தாளர் Sourashtra writer

சௌராஷ்டிரா எழுத்தாளர் Sourashtra writer புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி.ஆர். அன்பு நிலாச்சாரல் , முன்னாள் அமைச்சர் S. R. இராதா வாழ்க்கை வரலாற்றை, கற்பனை  கலப்பில்லாத நூலை ஆவணப்படுத்தியவர்.சௌராஷ்ட்ரா  சமூகத்தின் தகவல் களஞ்சியம்  மறைந்த எழுத்தாளர் மே.சீ.சுப்பிரமணியம் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.இவர் சிவில் இன்ஜினியர். சென்னை பெருநகர வளர்ச்சிச்குழுமத்தில் திட்ட  அமைப்பாளர் ஆக இருந்தவர்.இவரது இயற்பெயர் R. R. குபேந்திரன். இவரது குடும்ப பெயர்  இராமியா (Ramea) இவர் தனது குடும்பப் பெயரை புனைபெயராக வைத்து கொண்டு முற்போக்கு பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும், தன் முற்போக்கு சிந்தனை களை கதை வடிவிலும், காண்போரை கவரும் வண்ணம் கவிதைகள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.உறவுகள் வாழ்வினில் என்றும் உணர்வுடன் கலக்க வேண்டும். அளவிலா அன்பை நாளும் அள்ளியே வழங்கிட வேண்டும். தன் கலை பணியில் தொய்வுயின்றி தொடர்ந்து பணியாற்றுகின்ற, அவரது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.   என்றும் ரெங்கா ஜி

கீரை குழம்பு kirai kulampu

கீரை குழம்பு  kirai kulampu      தேவையான பொருள்கள் : அரைக்கீரை - 1 கட்டு பச்சை மிளகாய் - 3 பூண்டு - 5 பல் தக்காளி - 4 சின்ன வெங்காயம் - 10 கடுகு - அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும். கடாயில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார். * இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சௌராஷ்ரா நடிகர் sourashtra natikar

வாய்ப்புகள் எப்போதும்   மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்...! தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இந்த உலகில் இல்லை, ஆழ்ந்து சிந்திந்து செயல்பட்டால் அதற்கான வல்லமையை எளிதில் பெறலாம்...! சௌராஷ்ரா மொழி நடிகர். திரு.J. G நீலகண்டன் கலையின் மீது கொண்ட காதலால் கவிதைகள் கதைகள் களம் கண்டு சிந்தனைச் சிகரம் ' விருது பெற்றவர் கலை உலகில் சௌராஷ்ரா மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடித்தும் வருகிறார். கலை பணி சிறக்க வாழ்த்துக்கள்.

உளுந்து சட்னி ulundu chutney

உளுந்து சட்னி ulundu chutney 2 நபருக்கு பரிமாறும் அளவு தேவையான பொருள்கள் - தேங்காய் துருவல் - 1 சிறிய கப்  (100 கிராம்) உளுந்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி மிளகாய் வத்தல் - 2 தக்காளி - 1/2 பூண்டுப் பல் - 3 உப்பு - தேவையான அளவு                                  தாளிக்க - நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 4 கறிவேப்பிலை - சிறிது செய்முறை - அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் தேங்காய் துருவலை போட்டு லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.                                       அதே கடாயில் உளுந்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் மிளகாய் வத்தலை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும். கடைசியாக கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்களியை போட்டு நன்கு சுருள வதக்கிக் கொள்ளவும். வறுத்த எல்லாப் பொருள்களுடன் பூண்டுப் பல் உப்பும்  சேர்த்து மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.   அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி

வேர்க்கடலை சின்ன வெங்காய சட்னி verkkatalai chinna venkaya chutney

வேர்க்கடலை  சின்ன வெங்காய சட்னி தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் (தோல் நீக்கவும்) தேங்காய் துருவல் - கால் கப் சின்ன வெங்காயம் - 10 புளி - சிறிதளவு  பூண்டு - 4 பல் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 7 கொத்தமல்லித் தழை - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து வேர்க்கடலை, சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் கொத்தமல்லித் தழை, உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்தெடுக்கவும்.

மஷ்ரூம் ஆம்லெட் Mushroom omelette

மஷ்ரூம் ஆம்லெட்   நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த மஷ்ரூம் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தேவையானவை முட்டை - 3  காளான் - 1 கப்  வெங்காயம் - 2 (நறுக்கியது)  சாட் மசாலா - 1 சிட்டிகை  மிளகு தூள் - 1 ஸ்பூன்  வெண்ணெய் - 2 ஸ்பூன்  உப்பு - தேவைகேற்ப செய்முறை: ஒரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில், வெண்ணெயை போட்டு உருகியதும், காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி, மறுபடியும் நன்கு கிளறவும்.  அடுப்பில் தவா வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து, பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட் மசாலாவை தூவி, மடக்கி பரிமாறவும்

வெரைட்டி பருப்பு பொடி Veraitti paruppu poti

வெரைட்டி பருப்பு பொடி தேவையானவை: கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 4 டேபிள்ஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை கடாயில் எண்ணெய் விடாமல் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். பாட்டிலில் கொட்டி, காற்று புகாதவாறு மூடி வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். குறிப்பு: வீட்டில் காய்கள் இல்லாத சமயம் இந்தப் பொடி பயன்படும். சுட்ட அப்பளம், தயிர்ப் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.