Posts

Showing posts from April, 2020

(223)வரி செலுத்துதல் தமிழக முதல்வர் அறிவிப்பு

*கடன்கள், கட்டணங்கள், வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்: முதல்வர் அறிவிப்பு*     நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பயிர்க்கடன், சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை ஜூன் 30 ஆம்  தேதி வரை செலுத்தலாம். இதுபற்றி அறிவிப்பொன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் (30.3.2020) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன் 1. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது. 2. வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 4