Posts

Showing posts from February, 2022

கட்டாய பறிமுதல்கூடாது

Image
கட்டாய பறிமுதல் கூடாது: உச்ச நீதி மன்றம் கார் போன்ற எந்த வாகனத்தையும் வாகனக் கடனில் வாங்கும் போது அதற்குரிய தவணைத் தொகைகளை சரியாகச் செலுத்திட வேண்டும். அப்படி செலுத்த முடியாத நிலையில் அதற்குரிய பொருட்களை சட்டப்படியே பறிமுதல் செய்ய வேண்டும்; வலுக்கட்டாயமான நடைமுறையை பின்பற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை நகரைச் சேர்ந்தவர் திருமதி எஸ்.விஜய லட்சுமி. அவர் ஒரு கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் வாகனத்துக்கான கடனைப் பெற்றார். ரூ.1.82 லட்சம் அளவுக்கு வாகனக் கடனை வாங்கினார். அந்தப் பணத்தை மாதம் ரூ.4,604 என்ற அளவில் 60 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் சொன்ன படி குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தவில்லை. இதனால் திருமதி விஜயலட்சுமிக்கு விளக்கம் அளிக்கும் படி சட்டப்படியான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் அளித்திருந்த 26 வரைவோலைகளும் செல்லுபடியாகவில்லை என தனியார் நிறுவனம் கூறியிருந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்குள் ரூ.1.31 லட்சத்தை செலுத்தும்படி தனியார் நிறுவனம் கெடு விதித்து இருந்தது. அவரால் பணத்தைச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அவரின் கோ

ஹோட்டல் மற்றும் துரித உணவுகள் உரிமையாளர்களுக்கு நல்ல செய்தி

Image
(THE HONOURABLE MR.JUSTICE KRISHNAN RAMASAMY   W.P.No.10512 of 2018 and W.M.P.Nos.12478 & 12479 of 2018) இரவு 10.30 மணிக்குள் உணவகங்களை மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் துரித வகை உணவுகள் நடத்திவந்த எஸ். குணராஜா என்பவர் தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை விசாரித்த மாண்பமை நீதியரசர் திருமிகு. கிருஷ்ணன் இராமசாமி அவர்கள் இரவு 10.30 மணிக்குள் உணவகங்களை மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்று தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றி குற்றச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க ஆவண செய்ய வேண்டிய காவல்துறை இதுபோன்ற உணவகங்கள் மற்றும் சாலையோர துரித வகை உணவகங்களை 10.30 மணிக்குமேல் பூட்டியே  ஆகவேண்டும் என்று வற்புறுத்துவது என்பது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்தார். இது இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 19(1)(g)-இன் கீழ் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 21 வழங்கப்பட்டுள்ள கண்ணியமான வாழ்க்

நீதிமன்ற காவல்

Image
நீதிமன்ற காவல்  அல்லது விளக்க மறியல், (Remand (detention))  ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரால் காவல் துறையின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் போதிய ஆதாரத்துடன் எடுத்துரைத்தால், காவல் துறையின் விசாரணை முடியும் வரையோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு துவங்கும் வரையோ அல்லது வழக்கு முடியும் வரையோ குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் சிறையில் அடைக்கலாம்.

உயில் Executor

Image
ஒருவர் எழுதிய உயிலை அவரது மரணத்துக்கு பின் நிர்வகித்து அனைவருக்கும் உயிலில் உள்ளபடி சொத்துக்கள் சென்று சேரும்படி நடவடிக்கை எடுப்பவர்  Executor என அழைக்கப்படுவார். ஒருவர் தனது உயிலிலேயே - Executor யார் என குறிப்பிடுவது மிகவும் நல்லது. நாம் எழுதும் உயில் யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளும் வசதி உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து கொள்வோம். ஆம்; அப்படியொரு வசதி இருக்கிறது. எந்த சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் உயிலை நாம் பதிவு செய்கிறோமோ, அங்கேயே குறிப்பிட்ட தொகை செலுத்தினால், சப் ரிஜிஸ்தர் அதனை பத்திரமாக பாதுகாப்பார். அவர் ரீசீப்ட்- டை நமது வாரிசு தாரர்களிடம்  தந்து வைத்து விடலாம்.  நமது இறப்பிற்கு பின் அந்த ரீசீப்ட் மற்றும் நமது இறப்பிற்கான சான்று காட்டி - நமது வாரிசு தாரர்கள் நமது உயிலை பெற்று கொள்ளலாம்..

கணவன் எச்சரித்த பின்பும் மற்றொரு ஆணுடன் மனைவி ரகசியமாக பேசுவது தவறா

Image
கேரளாவை சேர்ந்த ஒருவர், மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது :என் மனைவி, இரவு நேரங்களில் வேறொரு ஆணுடன் போனில் ரகசியமாக பேசுகிறார். இருவரும் மிகவும் ஆபாசமாக பேசிக் கொள்கின்றனர். இது பற்றி மனைவியிடம், நான் பல முறை எச்சரித்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை.மேலும், 'உங்களை விட அவர்தான், எனக்கு மனதளவிலும், உடல் அளவிலும் நெருக்கமானவர்' என, மனைவி கூறுகிறார். அவருடைய நடத்தை மீது, எனக்கு சந்தேகம் உள்ளது. அதனால், எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்.இவ்  மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில், கணவர் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி   கூறியுள்ளதாவது:வேறு ஒருவருடன் போனில் பேசுவதை வைத்து, ஒரு பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மோசமானவர் என்றும் கூற முடியாது; கூறவும் கூடாது.இந்த வழக்கில், வேறு ஒரு ஆணுடன் மனைவி நெருக்கமாக இருந்ததை, மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. ஆனால், கணவர் எச்சரித்த பின்னும், இரவில் வேறு ஒரு ஆணுடன் போனில் ரகசியமாக

தான பத்திரம் தான செட்டில்மென்ட்

Image
( GIFT DEED & GIFT SETTLEMENT).... தான பத்திரம், தான செட்டில்மெண்ட்....... வித்தியாசம்...        தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும். இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க வேண்டும். தான செட்டில்மெண்ட்..... தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவுகளுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர பதிவுமுறை தான செட்டில்மெண்ட் ஆகும். இதன் மூலம் தன்மீது காட்டுகின்ற அன்பு, பரிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தனக்குச் சொந்தமான சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்குச் சொந்தமான தனிப்பட்ட சொத்தை தனக்குச் சொந்தமான குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் எழுதி வைக்க முடியும். இதற்கு அந்த சொத்தின் அரசு மதிப்பீட்டின் தொகையில் ஒரு சதவீதம் தொகை அல்லது அதிகபட்சம் ரூபாய் 25,

உயிலுக்கும் தானசெட்டில்மெண்ட்டுக்கும் உள்ள வித்தியாசம்

Image
உயிலுக்கும்செட்டில்மெண்டுக்கும் உள்ள வித்தியாசம்!! தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்த உடனேயே அதனை எழுதிக் கொடுக்கப்பட்டவருக்குச் சொந்தமாகிவிடும். எழுதிக் கொடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும். அவரே நினைத்தாலும் அதனை ரத்து செய்யவே முடியாது. உயில் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்தாலும், செய்யாவிட்டாலும் அந்த உயிலை எழுதியவர் இறந்த பிறகுதான் அமுலுக்கு வரும்.  உயிலை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அதனை எத்தனைமுறை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளலாம். ஆகையால் உயிலைப் பொறுத்தவரை கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

Image
மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சேவை குறைபாடுகளுக்கு  சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும் யார் மீது வழக்குத் தொடர்வது? எவ்வாறு இழப்பீடு பெறுவது?  இதுபோன்ற சூழ்நிலையில்தான், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 உதவுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன்கீழ், சேவைக் குறைபாட்டிற்காக இந்தச் சட்டப்பிரிவு 2(1)(0) ன் கீழ் மருத்துவமனை மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். சேவைக் குறைபாடு அல்லது தரக்குறைபாடான பொருள் ஆகியவற்றை வழங்கியதற்காக, பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது பலர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி புகார் அளிக்கலாம். இனி நுகர்வோர் நீதிமன்றத்தில் எப்படி புகார் அளிப்பது  நுகர்வோர் நீதிமன்றம் மாவட்ட அளவில், மாவட்டத் தலைநகரில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் எனவும், மாநில அளவில், மாநில நுகர்வோர் ஆணையம் எனவும், தேசிய அளவில், தேசிய நுகர்வோர் ஆணையம் எனவும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர், தான் பெற விரும்பும் நிவாரண தொகையைப் பொறுத்தே, அவர் எந்த நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யஇயலும். இருபது லட்சம் வரை இழப்பீடு கோரி தாக்கல் செய்யும் மனுவி

அடிப்படை சட்டம்

Image
ஒருவரை கைது செய்வதற்கான நெறிமுறை என்ன? ஒரு நபர் கைது செய்யப்படும்பொழுது அவருக்கு அவருடைய கைதுக்கான காரணத்தை காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும். கைது செய்யும் பொழுது ஒரு காவல்துறை அதிகாரி பெயர்த் தகடுடன் முழு சீருடை அணிந்திருக்க வேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட நபர் தாமாகவே முன்வந்து காவல் அதிகாரியுடன் வந்தால், வரைமுறையின்றி அவரிடம் நடந்து கொள்ளக் கூடாது. கைது செய்யும்பொழுதோ அல்லது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. பட்டவருடன் காவல் நிலையம் வந்தடைந்தவுடனோ காவல் துறையினர் கைதுக் குறிப்பாணை தயாரிக்க வேண்டும். கைதுக் குறிப்பாணையில் குற்றம் சுமத்தப்பட்டவரின் பெயர், முதல் தகவல் அறிக்கை எண், கைது செய்ய்ப்படுவதற்கான குற்றம், நேரம், தேதி, கைது செய்யப்பட்ட இடம் முதலியன இருக்க வேண்டும். கைதுக் குறிப்பாணையில் இரு தனிப்பட்ட சாட்சிகளின் கையொப்பம் இருக்க வேண்டும். விரும்பினால், கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு வந்தபின்னர் அவருடைய உடல்நிலை குறித்து காவல்துறை ஆவணத்தில் பதிவு செய்ய வற்புறுத்தலாம். கைது செய்யப்பட்ட நபருடன் அவருடைய குடும்ப நபர்கள் காவல் நிலையத்திற்கு உடன் வர உரிமை உண்டு. எந்தக் கைதும் காவ

செளராஷ்டிரா தொழிலதிபர் C.S.ராமாச்சாரி

'அவ்ராம் அமி'டிரஸ்ட் நிறுவர்  புகழாரம். சௌராஷ்ட்ர சமூகத்தின் இரண்டு கண்களில் ஒருவர் மறைந்த தொழிலதிபர் திரு. *C. S. ராமாச்சாரி* அவர்கள். முதலாமவர் சௌராஷ்ட்ர சமூகத்தின் தந்தை ராஷ்ட்ரபந்து *L. K. துளசிராம்* B.A.B.L, அவர்கள். சௌராஷ்ட்ர சமூக மக்கள் மாத்திரமல்லாமல் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறும் பொருட்டு உயர்நிலைப்பள்ளியை நிறுவி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்  *திரு. C. S. ராமாச்சாரி* அவர்கள் சௌராஷ்ட்ர சமூக குடும்பங்களில் முதல் பட்டதாரிகளை உருவாக்க சீதாலட்சுமி டிரஸ்ட் ஏற்படுத்தி கல்வி உதவித் தொகை வழங்கிய வள்ளல். ஏழை, எளிய மக்களுக்கு முதன் முதலில் தீபாவளி பண்டிகைக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கியவர். சௌராஷ்ட்ர சமூக மக்கள் குறைந்த கட்டணத்தில் திருமணம் மற்றும் விசேஷங்கள் நடத்த CSR திருமண மண்டபத்தை ஏற்படுத்தியவர். ஏழை, எளிய மக்களுக்கு சீதாலெட்சுமி மருத்துவ மனையை நிறுவியவர். சௌராஷ்ட்ர கல்லூரி வருவதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர். திரு. C.S.ராமாச்சாரி அவர்கள் மறைந்த போதும் அவரது நினைவு எங்களைப் போன்றோரது நினைவில் என்றும் நிலைத்து நிற்கும்.   *கே. தேவராஜ்,* 

காவல் நிலையத்திற்கு செல்லும் போது பயப்பட வேண்டாம்

அடிப்படை சட்ட விழிப்புணர்வு....... நீங்கள் காவல் நிலையத்திற்கு                     செல்வீர்களா ?.         பயப்பட வேண்டாம்... இந்த சட்டத்தை தெரிந்து கொள்வோம்! விவரிக்கிறார் R.ரெங்கா....... 1. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புலன்விசாரணை மேற்கொள்ளலாம். 2. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களில் காவலரைச் (Gr. II. PC) சேர்த்துக் கொள்ளக்கூடாது. 3. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்துவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள். சிறு குற்றங்கள் அல்லது விரைவாக விசாரணை முடிக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகியவற்றில் தலைமைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்திட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர்.  பெரும்பாலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் (SHO) அதாவது காவல் சார்பு ஆய்வாளர் / காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு புலன்விசாரணை நடத்திட அதிகாரம் உள்ளது. பெருங்குற்ற வழக்குகளில் காவல் நிலை ஆணைகளின்படியும் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் துறை சார்ந்த அறிவுரைகளின்படியும், காவல் ஆய்வாளர