Posts

Showing posts from March, 2020

(222) ‌Emergency Travel Police Control Room Opening.

*அவசரப் பயணம்: கட்டுப்பாடு அறை திறப்பு*       ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அவசரப் பயணம் மேற்கொள்வோா் வசதிக்காக சென்னை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிா்த்து, வெளியே வருவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திடீரென அவசரப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இறப்பு, திருமணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு சென்னைக்குள்ளோ, தமிழகத்துக்குள்ளோ அல்லது வெளி மாநிலத்துக்கோ பயணிப்போா் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 75300 01100 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகத் தொடா்புக் கொள்ளலாம்.     கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) மூலமாகவும், மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம். அவசரத் தேவைக்கு வெளியே செல்ல அனுமதிச்சீட்டு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டு அறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றத்தடுப்புப் பிரிவ

(221) Anticipatery Bail petition.எதிர்பார்ப்பு ஜாமீன் மனு.

கொரோனா எதிரொலி..... வழக்கமாக உயர்நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் முன்ஜாமின் மனுக்களை  (Anticipatery Bail Petition  AB) நோடியாக  உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய தடை.... (144 தடை உத்தரவு காரணமாக) முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர்,  அந்த உத்தரவுக்கு மேலே தான் உயர் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என உத்தரவு.

(220). அரசு போக்குவரத்து கழக பணிமனை

*அரசு போக்குவரத்துக்கு 'டிப்போ'வுக்கு பாதுகாப்பு* திருப்பூர் : 'போக்குவரத்து டிப்போவில் நிற்கும் அரசு பஸ்களின் பாதுகாப்புக்கு மூவர் போதும். மற்றவர்கள் பணிக்கு வர வேண்டாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு நாடு முழுவதும் அடுத்த, 21 நாட்களுக்கு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. முந்தைய தினம் மதியம் முதலே பஸ் சேவை குறைக்கப்பட்டதால், நேற்றிரவே திருப்பூர் டிப்போவுக்கு அனைத்து பஸ்களும் வந்து சேர்ந்தது.டிப்போ ஒன்றில், 73 பஸ்களும், இரண்டில், 61 பஸ்களும், டவுன், சர்வீஸ், எக்ஸ்பிரஸ், நான் - ஸ்டாப் என வரிசைப்படுத்தி நிறுத்தப்பட்டது. சென்னை, திருப்பதி செல்ல வேண்டிய எஸ்.இ.டி.சி., பஸ்களும் வந்து சேர்ந்தது.டிப்போவுக்கு இரவு மற்றும் பகல் நேர வாட்ச்மேன், பஸ்களை கண்காணிக்க ஒரு உதவி பொறியாளர் மட்டும் பணியில் இருந்தால் போதும். மற்ற அலுவலர்கள் பணிக்கு வர வேண்டாம். உயர் அலுவலர்கள் வீட்டில் இருந்து அரசு உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் அழைக்கும் போது, ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் :தினமலர் நாளித

(219). Happy sourashtra New year

Image
Happy sourashtra New year இன்று ஸௌராஷ்டர விஜயாப்தம் 708 வது வருட பிறப்பு தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க அந்த அரங்கன் பாதம் பணிவோம்!

(218) ‌Telugu New Year சுகந்தம் வீசும் யுகாதி திருநாள்.

சுகந்தம் வீசும் யுகாதி திருநாள்:: """""""""""""""""""""""""""""""""""""""""'"'''''''''' தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.  பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரத மையில் யுகாதி கொண்டாட வேண்டும் அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட  மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது. உகாதி கொண்டாட்டம்:: ""''''''"''""''""""""""""""""""""&quo

(217) ‌MTC பஸ் திருச்சி வரை இயக்கம்

*சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்* சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கம் விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை சென்னை மாநகர பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதால் சென்னை பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மிக முக்கியம் கூட்டம் கூடக்கூடாது என்பதுதான். அதற்காகத்தான் தடை உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சொந்த ஊருக்கு செல்ல ஒருவரை ஒருவர் முண்டியடித்து செல்வது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தகவல் :webudiuna தேதி : 23.03.2020

(216) ‌அலை மோதும் மக்கள் கூட்டம்

*கோயம்பேட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம். நாளை மாலை வரை பஸ்கள் இயக்கப்படும் என  அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி!* சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை மாலை வரை வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்; எனவே பொதுமக்கள் கவலையடைய வேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது, நாளை மாலையில் இருந்து அமலுக்கு வருகிறது. இதையடுத்து சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள், தங்களது சொந்த ஊருக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் குவிந்து வருகின்றனர். கட்டுக்கடங்காத பொதுமக்கள் கூட்டம் இருக்கிறது. இதனால் பேருந்துகளில் இடம் பிடிப்பது உள்ளிட்டவற்றில் பயணிகளிடையே மோதல், வாக்குவாதம் உள்ளிட்டவை ஏற்படுகிறது, பயணிகளை ஒழுங்குபடுத்தவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு நாளை மாலை வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும்; எ

(215). C.M.press meet highlights.

CM Press meet Highlights. 1. Entire state lockdown 2. Not more than 4 members including within family should not gather. 3. One family member per household will be allowed to step out to buy daily needs. 4. For daily waged labor (white ration card) will be provided free with 1 month required rice, 12kg per individual. Through fair price shops. 5. Along with rice Rs.1500, cash will be provided per family. 6. Except for essential services all government departments should work from home. And only 20% should work basis roaster. 7. All education departments, schools will be closed till 31st. 8. Building Construction workers and contract workers, working labor, industrial workers both in government and private sectors should be paid salary of lockdown days. 9. Anganwadi centers will be closed, but kids and pregnant will be provides nutrition at home. 10. Pregnant Women expecting soon will be extended with proper medical support through Amma Odi. 11. Only emergency services will be available

(214) ‌மாவட்ட எல்லைகளை மூட முதல்வர் உத்தரவு

*கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கை: நாளை முதல் மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளை மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு* சென்னை: சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 192க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,36,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 416க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.தொடர்ந்து, இன்று காலை 5 மணி வரை நீடிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில், பஸ், ஆட்டோ, கார

(213) Women lawyers demand subsided housing plots

Image
Women lawyers demand subsided housing plots

(212) மார்ச் 21 உலக வனநாள்

*அடங்கி கிடக்கின்றது உலகம் என்கிறார்கள்.* *உண்மையில் இல்லவே இல்லை* சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பொழிகிறது வழக்கமான உற்சாகத்துடன் கடல் அலை அடிக்கின்றது. மான்கள் துள்ளி ஓடுகின்றன, அருவிகள் ஆர்பரித்துக் கொட்டுகிறது,  யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றது, மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் அனைத்துப் பூச்சி இனங்களும் கூட அஞ்சவில்லை மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான் மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ உலக நியதி என்றான் உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமு

(211) 50 கோடி ரூபாயில் பழுது நீங்கும் வாகனம்

*தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ.50 கோடியில் 350 மீட்பு வாகனம் வாங்க முடிவு* சேலம்: அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு, 50 கோடி ரூபாயில், 350 பழுது நீக்கு வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்துக்கழக, எட்டு கோட்டம், 21 மண்டலம், 322 பணிமனையில், 22 ஆயிரத்து, 632 பஸ்கள் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டில், போக்குவரத்துக்கழகங்களுக்கு புது பஸ்கள் - 6,900, மறு சீரமைப்பு செய்யப்பட்ட பஸ்கள் - 3,400 வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்க, வழித்தடங்களில் பழுதாகி நிற்கும் நிலையில் சரிசெய்ய, போதிய அளவில் மீட்பு வாகனங்கள், போக்குவரத்துக்கழகங்களில் இல்லை. பழைய பாடாவதி நிலையிலேயே மீட்பு வாகனங்கள் செயல்பட்டன. இதனால், எட்டு கோட்டங்களுக்கு, 50 கோடி ரூபாய் செலவில், 350 மீட்பு வாகனங்கள் வாங்க முடிவு செய்து, அதற்கான ஆர்டர், கரூர், பெங்களூரு, சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'பழைய மீட்பு வாகனங்களில் போதிய அளவு நவீன உபகரணங்கள் இல்லை. புது பஸ்களில் ஏற்பட்ட சிறு பழுதை கூட சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது வர

(57ம20.2) ‌போக்குவரத்து கழகத்துக்கு பணம் இழப்பு.

*கரோனா வைரஸ் அச்சத்தால் போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.16 லட்சம் இழப்பு* கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்துக்கு தினமும் ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டத்தில் மதுரை மண்டலத்தில் 951 பஸ்கள், விருதுநகர் மண்டலத்தில் 418, திண்டுக்கல் மண்டலத்தில் 898 பஸ்கள் என மொத்தம் 2167 பஸ்கள் உள்ளன. இதில் 881 பஸ்கள் தொலை தூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. கரோனா வைரஸ் பரவு வதைத் தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளன. இந்த விடுமு றையைப் பயன்படுத்தி மக்கள் வெளியூர் பயணங்களையும், சுற்றுலாச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதன் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண் ணிக்கை கடந்த இரு நாட்களாக 40 சதவீதம் குறைந்துள்ளது. கூட்டம் குறைந்ததையடுத்து நேற்றும், நேற்று முன்தினமும் சுமார் 240 தடங்கள் குறைக்கப்பட்டன. இதனால் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மண்டலங்கள் அடங்கிய அரசு போக்குவரத்து கழக மதுரைக் கோட

(56.ம20.2) ‌ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா..?

அதென்ன மார்ச் 22 ஊரடங்கு.... அதற்கு முன்னும் பின்னும் கரோனா தாக்காதா? அதென்ன மார்ச் 31 வரை... அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா... ? நிறைய முன்னறிவிப்புகள்.  கூடவே கப்சா கதைகள்.  அது கூட பயங்காட்டிகள்.  பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள்.  டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார், பயோவார் என்னும் திசை திருப்பல்கள்... எதை தான் நம்புவது என்று புரியாமல் யாரோ ஒருவரின் மூளைச்சலவைக்கு அறிவை அடகு வைக்கும் பாமர மக்கள்... இதைப் புரிந்து கொள்ள கொரோனா பற்றிய அறிவு அவசியம் கொரோனா என்றும் கோவிட்19 என்றும் அழைக்கப்படும் வைரஸ் சட்டென்று பரவக்கூடிய ஒரு நோய் தொற்று, பெரும்பாலான வைரஸ்கள் போல் இதற்கும் தடுப்பு மருந்தோ தீர்க்கும் மருந்தோ கிடையாது, இயற்கையாக நம் உடம்பே எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதை அழிக்கும், அதற்கு நம் உடல் வலிமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த வைரஸ் பரவுவது நான்கு கட்டங்களாக வரைவு படுத்தப்பட்டுள்ளது Stage 1: (Imported) வைரஸ் பரவியுள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் நோய்தொற்றோடு வரும் பருவம் Stage 2: (Local Transmission) அவ்வாறு வரும் நபர்கள் நம் நாட்

(55.m19.2). Prime minister speech in brief.

*PMs speech in brief -*  India cannot become complacent !!  Steps to be taken as a nation to combat this pandemic - 1. Janata curfew  Sunday, 22 March 7 am to 9 pm. No one outside homes this day at all. 2. Social distancing to be practiced 3. Abide by centers guidelines 4. Call 10 people and spread this message of social distancing and Janata curfew. 5. This will be a test of our ability of restraint and resolve  6. All our essential service providers like medical professionals, transport service providers , etc are outdoing themselves . Let's thank them by clapping and cheering  them on Sunday, 22 March at 5 pm sharp from our balconies, doorway s and windows. 7. Avoid going to hospitals for a routine checkup. Call family doctors over the phone for small problems . 8. Elective surgeries should be postponed. 9. COVID 19 Economic Task force has been set up by the government to reduce economic issues caused by this pandemic. 10. Traders , business people have been requested to take ca

(54ம19.2) ‌ஊதிய ஒப்பந்தம் பேச்சு

*போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு* கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியும், இன்னும் அது தொடா்பாக போக்குவரத்துக் கழகம் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. எனவே, 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் முன்பு மாா்ச் 10-ஆம் தேதி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஈடுபட்டனா்இதைத் தொடா்ந்து, 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே மாா்ச் 20-ஆம் தேதி காலை 10 மணிக்

(53.ம17.2)இளம் விஞ்ஞானி_மந்திரசொல்!

"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்" அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்! பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவுகச்சியா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி ப்ரேம் ரஞ்சன் கன்வார். இவரது பகுதியில் விவசாயிகள் மிகப் பலரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இருவருமே கூட ஒரு வாழை விவசாயி தான். அடிக்கடி வெள்ளம் பாதிக்கப்படும் பகுதி இது என்பதால் இளம் வாழைக் கன்றுகள் தண்ணீர் தேங்கி அழுகிப் போவது ஆண்டுதோறும் தொடர்கதையாகவே நடந்து வந்தது. அடிக்கடி பெருமளவில் சூறைக் காற்றும் இங்கு வீசும். இதனால் பெரிய மரங்கள் காற்றில் வீழ்ந்து போக விவசாயிகளின்  வாழ்க்கை கேள்விக்குறியாகவே என்றும் இருந்து வந்தது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் ஏழ்மையிலும் சோகத்திலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். ப்ரேம் ரஞ்சன் மகன் கோபால் சிறுவயது முதலே ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டு பள்ளிப் படிப்போடு புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வந்தார்.வாழை விவசாயிகளின் துயர் துடைக்க ஏதாவது

(52ம16.2) தமிழக முதல்வர் வேண்டுகோள்!

Image
கரோனா: வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்... கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகள் வரையிலான மாணவா்களுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளித்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு துறைகளுக்கு மாநில பேரிடா் நிதியிலிருந்து ரூ. 60 கோடி நிதி ஒதுக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 107 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு போ் உயிரிழந்துள்ளனா். இந்தச் சூழலில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய பெரும் நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்க தேச எல்லைகளை இந்தியா மூடியுள்ள

(51ம16.2). சக்கரை என்று காகிதத்தில் எழுதினால்‌ இனிக்குமா?

சர்க்கரை என்று பேப்பரில் எழுதினால் இனிக்குமா?  போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் ,செலவுக்கும் ஆன வித்தியாசத் தொகையை ஈடுகட்ட அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.  2017 மே மாதம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் போது தமிழக அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், மாண்புமிகு தங்கமணி, மாண்புமிகு விஜயபாஸ்கர் ஆகியோர் கழகங்களின் நிதி பிரச்சினைக்கு அரசு தீர்வு காணும் என ஒப்புக்கொண்டனர் . மூன்று ஆண்டுகள் முடியும் நிலையிலும் அமைச்சர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை . 2020 - 21 ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் முழுமையான நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி 2716. 26 கோடி என அரசு கூறியுள்ளது.  பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் ஒவ்வொரு முறையும் நாம் போராடும் போது கடனாக கொடுத்து அடுத்த பட்ஜெட்டில் அதை ஈடுகட்டும் நிலையே இப்போதும் தொடர்கிறது.  ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணபலம் வழங்க சென்ற ஆண்டு வழங்கிய தொகை ஆயிரத்து 93 கோடி இப்போது பட்ஜெட் ஒதுக்கீடு ஆக மாற்றப்பட்டுள்ளது.  மீதி உள்ள தொகை வழக்கமான அறிவிப்பு தான் . இப்போது தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து கணக்கில் செலுத்தப்படும் தொக

(50.m15.2.) M.T.C.பஸ்சில் கண்காணிப்பு கேமரா!

*பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'எம்டிசி' பஸ்சில் கண்காணிப்பு கேமரா: போலீசாருடன் இணைந்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை* சென்னை: பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசு பஸ்சில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்தத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர். அந்தப் பேருந்திற்குள் இருந்த கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர்.பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி இந்த கும்பல் வெட்டியது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு மாணவர்கள் வந்து செல்லும் 17 வழித்தடங்களில் ஆறு வழித்தடங்கள் அடிக்கடி ம

(48.m13) .M.T.C. Bus_New App.

*இனிமே மாநகர பேருந்து எங்கே இருக்கிறது, எப்ப வரும்னு தெரிஞ்சுக்கலாம்.. புதிய அப்ளிகேஷன் அறிமுகம்..* சென்னை மாநகர பேருந்துகள் எங்கே வருகிறது என்பதை தெரிந்துகொள்ள புது அப்ளிகேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 700க்கும் அதிகமான வழி தடங்களில் சுமார் 3,300க்கும் அதிகமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் பேருந்தில் பணிக்கு செல்லும் மக்களுக்கு பேருந்து மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிகமான பேருந்துகள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக சில நேரங்களில் பேருந்து சரியான நேரத்திற்கு வருவதில்லை என குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது, பேருந்து வருகிறதா? இல்லையா? எங்கே வருகிறது என தெரிந்துகொள்ளும் வகையில் புதிய 'Chalo App' என்ற அப்ளிகேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் GPS கருவி மூலம் இந்த அப்ளிகேஷன் செயல்படும் என கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட பேருந்து எண்ணை வைத்து தேடினால் அந்த பேருந்து எங்கே வருகிறது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரும் என்பதை இருந்த இடத்தில இருந்தே தெரிந்து கொள்ள ம

(47ம11.2)"அடையார் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் , சிறப்பு"

புற்றுநோய் மருத்துவத் துறைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா. 'மகசேசே' விருது, 'பத்மஸ்ரீ', 'பத்ம பூஷண்', 'பத்ம விபூஷண்' என இந்தியாவின் உயரிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர். நம் சம காலத்தின் சாதனைப் பெண்மணிகளில் முக்கியமான முன்னோடி. "90 வயசுதான் ஆகுது... சாதிக்க வேண்டியது இன்னும் நிறையதான் இருக்கு" என்று எளிமையான அணுகுமுறையுடனும், புன்னகையுடனும் பேச ஆரம்பித்தார் டாக்டர் சாந்தா. ''பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். ஓலைக் கூரையால் வேயப்பட்ட, அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மயிலாப்பூர், தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். அப்போ எல்லோரையும்போல, எனக்கும் சுதந்திர உணர்வு நிறையவே இருந்துச்சு. எங்க பள்ளியின் முதல்வர் செல்லம். அவங்ககிட்டதான் நிறைய நல் ஒழுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அந்தக் காலகட்டத்துல பெண்களுக்கு கல்வி கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். கல்வி கற்ற பெண்கள் பலரும் அதை பயன்படுத்திக்காம, கல்யாணம், குடும்பம், குழந்தைகள்னு இர

(46ம11.2)முதலமைச்சர் ஊதிய பேச்சு வார்த்தையில் தலையிடவேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பேச்சுவார்த்தையில் முதல்வர்  தலையிட  சிஐடியு  வலியுறுத்தல்.  போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பேச்சு வார்த்தையை துவக்க  தமிழக  முதல்வர் தலையிட வேண்டும்  என்று சிஐடியு வலியுறுத்தி யுள்ளது.   இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து  ஊழியர்களின்  ஊதிய  ஒப்பந்தக் காலம்  முடிந்து  6  மாதங்களாகி விட்டது. புதிய  ஊதிய  கோரிக்கைகள் போக்கு வரத்து நிர்வாகங்களுக்கும், அரசுக்கும் அனுப்பியும் இது நாள் வரை பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. போக்கு வரத்து சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பலமுறை வலி யுறுத்தப்பட்ட நிலையிலும் அரசு தரப்பில் பேசி சுமூக தீர்வு  காண முன்வராதது பொறுத்த மற்ற செயலாகும். கடந்த ஊதிய ஒப்பந்தமும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட  தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களின் நிர்ப்பந்தத் தின் காரணமாகவே ஏற்பட்டது என்பதை முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு வருகி றோம். பொதுமக்களின் பயண சேவையை பல்வேறு சிரமங்க ளுக்கு மத்தியிலும் உயிரை பண யம்வைத்து இரவு பகல் பாரா மல் கண்ணஞ்

(49ம8.20) கற்றுக் கொள்வோம்"வாழ்வதற்கு"!

புனிதத்தலமான மெக்கா வெறிச்சோடி கிடக்கிறது.... ஈரானில் வெள்ளிக் கிழமை தொழுகை  தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்படுகிறது... வாடிகனில் போப்பாண்டவர் பொதுமக்களை சந்திப்பதை நிறுத்தி வைக்கிறார்.... இந்தியாவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடுவதை   பிரதமர் தவிர்க்கிறார்.... முதலில் உயிர்  அதற்கு பிறகு தான் மதம்னு  ஒவ்வொரு முறையும்  இயற்கை பேரழிவுகள் நிருபித்தாலும், துயரம் முடிந்தவுடன் மீண்டும் மதங்களை சுமந்துக் கொள்ளவே  பழக்கப்படுத்தி வைத்துக் கொள்கிறது இந்த "பாழாய் போன மனம்" கற்றுக் கொள்வோம் "வாழ்வதற்கு" "வாழ்தல் இனிது"

(45.ம8.20) போக்குவரத்து துறை_விகடன் ஆர்.டி.ஐ.ரிப்போர்ட்!

அதலபாதாளத்துக்குச் செல்கிறதா தமிழக போக்குவரத்துத் துறை? அதிரவைக்கும் விகடன் ஆர்.டி.ஐ ரிப்போர்ட். `தமிழக போக்குவரத்துத் துறை கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. வருமானத்தை விஞ்சிய செலவுகளும் தனியார் வளர்ச்சிக்குத் துணைபோவதும்தான் நஷ்டத்துக்குக்கான காரணம்’ என்று தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அதுதொடர்பான தகவல்களைத் திரட்ட களமிறங்கியது விகடன் ஆர்.டி.ஐ குழு.  தமிழகத்தின் சென்னை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய ஏழு கோட்டங்களில் 2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளின் வரவு-செலவு புள்ளிவிவரங்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தோம். கிடைத்த பதில்கள் அதிர்ச்சி ரகம்! தமிழக போக்குவரத்துத் துறையின் ஏழு கழகங்களில் 2014-2015 நிதியாண்டு முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் 12,963.54 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 2017-18 நிதியாண்டில் மட்டும் 5,252.60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில், கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, சேலம் ஆகிய நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மட்டும் அதிகளவில் நஷ்டம் ஏ

(44) பேங்க் இணைப்பு

*வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1–ந்தேதி அமல்:.* *மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.* *புதுடெல்லி, மார்ச்.5-* வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 4 முக்கிய இணைப்புகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதன்படி வங்கிகள் இணைப்பு கீழ்க்கண்டவாறு அமைகிறது. 1. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன. 2. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. 3. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. 4. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன. இது ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், வங்கிகள் இணைப்பது தொடர்பாக சம்பந்தப்ப