Posts

Showing posts from September, 2019

ஏசி பஸ்ஸில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம்

*ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வித் ஏ.சி!' - கரூரில் தொடங்கப்பட்ட பேட்டரி பேருந்து* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால், குறைந்த தூரப் பயணப் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் 30 09 2019 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை இன்று கரூரில் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, பேட்டரியில் இயங்கக்கூடிய நவீன வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்தில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயணம் மேற்கொண்டார். பேருந்துகளை அறிமுகம்செய்த எம்.விஜயபாஸ்கர் தமிழக போக்குவரத்துத் துறை பேருந்துகளை பொறுத்தமட்டில், அதிக தூரம் பயணிக்கக்கூடிய பேருந்துகளில் மட்டுமே குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இப்போது குறைந்த தூரம் பயணிக்கக்கூடிய பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக, சென்னை முதல் திருவண்ணாமலை வரை இரண்டு பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால், 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கக்கூடிய பேருந்துகளாகும். தற்பொழுது இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் 150 குளிர்சாதனப் பேருந்துகள

ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்

பயாஜ் வெங்காயம் டமாடர் தக்காளி காஜ்ஜர்- கேரட்,, சிம்லா மிர்ச் குடைமிளகாய்  லால் பிர்ச் மிளகாய் ,பத்தாகோபி -முட்டைகோஸ், கோபி காலிஃப்ளவர்,கரேலா- பாகற்காய்,ச்சுந்தர்-பீட்ரூட் லெளகீ -சுரைக்காய் , தனியா-கொத்தமல்லி, கீரா- வெள்ளரிக்காய், கடிபட்டா -கருவேப்பிலை,பைங்கன்- கத்தரிக்காய்,மெதீ-வெந்தயக் கீரை, லசன்- பூண்டு,அடரக்-இஞ்சி,ஹரி பிர்ச்-பச்சை மிளகாய், பிண்டி-வெண்டைக்காய், புதினா- புதீனா, மஸ்ரூம் காளான், மட்டர்-பட்டாணி, ஆலூ-உருளைக்கிழங்கு, மக்கீ ஃ-சோளம், முல்லீ- முள்ளங்கி, மீதா ஆலூ- சக்கரை வள்ளி கிழங்கு.

பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாள் முடிவடைகிறது. இந்நிலையில் பான் கார்டுன் ஆதாரை இணைப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.* வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது.* ஏற்கெனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் தரப்படாதுஎனவே, நாளை மறு நாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைனின் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எளிது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா..?* வருமான வரித் துறை இணைய தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் (https://www.incometaxindiaefiling.gov.in/home)* அதன் இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக

தமிழக அரசு புதிய பேருந்துகள்

அரசு பேருந்துகளை நவீனமாக்க ஜெர்மன் வங்கியில் 1575 கோடி கடனுதவி.   தமிழ்நாடு அரசு பேருந்துகளை நவீனம் ஆக்குவதற்கு கே எஃப் டபிள்யூஎனப்படும் ஜெர்மன் வங்கி தமிழகத்திற்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கிறது இதற்கான ஒப்பந்தம் 27 9 2019  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தானது.தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் இத்திட்டத்திற்கு இந்த ஒப்பந்தத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கே எஃப் டபிள்யூ பிரதிநிதிகளும்கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் கடனுதவி பயன்படுத்தி தொடக்கக் கட்டத்தில்( 2213 BS VI) பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.இந்தப் பேருந்துகள் அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

பணி ஓய்வு பெற்றபின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

பணி ஓய்வு பெற்றபின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பார்கள். இதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். அது தவறு அல்ல. ஆனால் Walking தான் முக்கியமே தவிர Talking அல்ல. நடைப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வருவதைக்கூட செய்யலாம். தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளை பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30மணிக்கே சாப்பிட்டுவிடுவது நல்லது. குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள். பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது சென்று பரிசோதனை செய்துகொள்ளவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக கோட்டங்கள்

1. மாநகர போக்குவரத்து கழகம்( சென்னை) 2. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட் கோயம்புத்தூர்.3 தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்  (விழுப்புரம் ) லிமிடெட் விழுப்புரம்.4 தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்  (கும்பகோணம்) லிமிடெட் கும்பகோணம் , கும்பகோணம் ( தஞ்சாவூர் மாவட்டம் 5.தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (சேலம் )வரையறை சேலம் 6.தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம்( மதுரை) வரையறை மதுரை 7. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) வரையறை திருநெல்வேலி மாநில விரைவு போக்குவரத்து கழகம் (எஸ் இ டி சி) 8 மாநில விரைவு போக்குவரத்து கழகம்( SETC)

திருநெல்வேலி அல்வா

திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: நெய் - 300 கிராம், கோதுமை - 200 கிராம், சக்கரை 600 கிராம் நெய் - தேவையான அளவு நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு செய்முறை: இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள். கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு. கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,ந

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி போராட்டம் வெற்றி

போக்குவரத்து ஓய்வூதியர் போராட்டம்24.9.2019 வெற்றி போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி பிரச்சனைக்கு 45 நாளில் தீர்வு காணப்படும் என்று போக்குவரத்து துறை செயலாளர் உறுதி அளித்துள்ளார். போக்குவரத்து கழகங்களில் 80ஆயிரம் பேர் ஓய்வூதியர்களாக உள்ளனர். இவர்களுக்கு 2001ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தங்களின்படி பணப்பயன்களை உயர்த்தி நிலுவையுடன் சேர்த்து தர வேண்டும், தமிழக அரசு நிதி ஒதுக்கி மாதத்தின் முதல் தேதியன்று ஓய்வூ தியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7ஆயிரத்து 850 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், 2019 ஏப்ரல்-ஆகஸ்ட் வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வு காலப் பலன்களை வழங்க வேண்டும், மருத்துவப் படியை 300 ரூபாயாக உயர்த்துவதோடு, காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.24) தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்ப ட்டிருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு குவிந்தனர். இத

சென்னையில் 5 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

*5 புதிய வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கம்* ஐடி காரிடார் பகுதியை எளிதில் அணுகும் வகையில், 5 புதிய வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, மாநகரப் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 46 லட்சமாக இருந்தது. இது, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 33 லட்சமாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து பயணிகளின் தேவை குறித்து நிர்வாகம் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, புதிய வழித் தடங்களான 91 சி (வேளச்சேரி - வண்டலூர் பூங்கா), 66 ஜி (குன்றத்தூர் - கூடுவாஞ்சேரி), 570 வி (வடபழனி - கேளம்பாக்கம்), 19 வி (சோழிங்கநல்லூர் - வண்டலூர்), 55 கே (கண்டிகை - கூடுவாஞ்சேரி) ஆகியதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியது: 570 எஸ் (சிஎம்பிடி - கேளம்பாக்கம்) வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 15 பேருந்துகள் 570-வி வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காகவும், கோயம்பேட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 11-

மின்சார பேருந்துகள் 2000 பி எஸ் 6பேருந்துகள் வாங்க இருக்கும் தமிழக அரசு

*ஜெர்மன் வங்கியிடம் இருந்து வட்டியில்லா கடன் பெற்று 12 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்து வாங்க முடிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்* ஜெர்மன் வங்கியிடம் இருந்து தமிழக அரசு வட்டியில்லா கடன் பெற்று 2 ஆயிரம் மின்சார பேருந்துகள், 12 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்துகள் வாங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சேலம் கோட்ட அரசு போக்கு வரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப் பலன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசுப் போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக் குநர் சேனாதிபதி வரவேற்றார். போக்குவரத்து செயலர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், சமூக நல அமைச்சர் சரோஜா ஆகியோர் பேசினர். அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் அரசு போக்குவரத் துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.5,199 கோடி வழங்கப்பட்டது. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டு ஆட்சியின்போது ரூ.928 கோடி வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 6,253 பேருக்கு, ஓய்வூதியப் பலனாக மொத்தம் ரூ.1,093 கோடி

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கண்டக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய கடமைகள்

அரசு மற்றும்தனியார் பேருந்து கண்டக்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் * பணியில் இருக்கும் போது நடத்துனர் (MVR Sec 78) *(மோ.வா.ச பகுதி 78)* :- (1) *புகை பிடிக்கக் கூடாது* (2) *பயணிகளிடம் உபசரிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும்.* (3) *தூய சீறுடை அணிந்திருக்க வேண்டும்.* (4) *வாகனத்தை சுத்தமாகவும், சுகாதாரமாககும் வைத்திருக்க வேண்டும்.* (5) *அடுத்த வாகனத்தில் ஏறும் பயணிகளிடம் இடையூறு செய்யக் கூடாது. (அதாவது எந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்வது பயணிகளின் உரிமை.) அதில் தலையிடக் கூடாது * பயணிகளிடம் நடத்துனரின் கடமை (MVR Sec 79) *(மோ.வா.ச பகுதி 79)* :- ***************** (1) *அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது.* (2) *பொருட்களை ஏற்றுவதற்கோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ இடத்தை மிச்சப்படுத்த, பயணச்சீட்டுக்கு சரியான தொகையைத் தர முன் வரும் எந்த ஒரு பயணியையும் புறக்கணிக்கக் கூடாது.* (3) *பயணிகள் போக பொருட்களை ஏற்றும் போது, அப்பொருட்களால் பயணிகளுக்கு நெருக்கடியோ இடையூறோ அல்லது அபாயமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.* (4) *எந்த காரணத்திற்காகவு