Posts

Showing posts from April, 2022

"பொய் சாட்சி"

Image
"பொய் சாட்சி"  நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள்  திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளும் (Witnesses), சாட்சியங்களும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. "சாட்சிகள் தான் நீதிமன்றத்திற்கு கண்களும், காதும் ஆகும்.  யாராவது ஒருவர், சட்டப்படியும் நீதியின்படியும் சத்தியப் பிரமாணம் செய்து தான் கூறப்போவது உண்மையை மட்டும் தான் என சத்தியம் செய்து சான்று அளிக்கும்போது போது உண்மையை மட்டும் கூறவேண்டும்.  பொய்யானதை உண்மையென்று கூறுவதைப் பொய்ச் சான்று அளித்தல் என்கிறோம்.  . வாய்மொழியாகக் கொடுக்கும் வாக்குமுலத்தையன்றி எழுத்து முலமாகத் தரப்படும் வாக்குமூலங்களும் இதில் அடங்கும். நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்வது பற்றி  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 191 லிருந்து 229 வரை தெளிவாக கூறப்பட்டுள்ளது.  இதன்படி பொய் சாட்சி சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பிரிவு - 195 : பொய் சாட்சி என்றால் என்ன? சட்ட விதிமுறைகளுக்கோ அல்லது உண்மைமையே பேசுவதாக தான் எடுத்துக் கொண்ட பிர

புதிய போக்குவரத்து காப்பீடு சட்டம்

Image
*1 ஏப்ரல் 2022 முதல் நீதிமன்றம், மற்றும் போக்குவரத்து துறையின் வழிகாட்டுதலின்படி. காப்பீட்டு நிறுவனங்கள் பின்வருவனவற்றைச் செயல்படுத்தும்:*_  _*1).* ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள், *அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல்* காப்பீட்டின் கீழ் வரமாட்டார்கள்._  _*2).* மேலே உள்ள நிபந்தனைகள் *2, 4 சக்கர வாகனப் பயணிகளுக்கும் பொருந்தும்.*_  _*3).* *ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல்* காப்பீட்டின் கீழ் வராது._  _*4).* தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏதேனும் விபத்து நடந்தால், *தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது & சரியான பாதையில் வாகனத்தை ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது.  _*5).  குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் காப்பீட்டின் கீழ் வரமாட்டார்கள்* மற்றும் எந்த இழப்புக்கும் இழப்பீடு இல்லை._  _*6).*தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டால்,  அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் வரை வசூலிக்கப்படும்* அது காயமடைந்தவர்களுக்குக் கொடுக்கப்படும்.  அவரால் அதைக் கொடுக்க முடியவில்லை என்றால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.  _*7).* *மொபைலில் பேசி விபத்து ஏற்படுத்து

கணவனுக்கு ஜீவனாம்சம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Image
கணவனுக்கு_ஜீவனாம்சம் உயர்நீதிமன்ற_தீர்ப்பு! ஆசிரியையாகப் பணிபுரியும் மனைவி, தனது கணவனுக்கு  மாதந்தோரும் ரூ.3,000 பராமரிப்புத் தொகையை வழங்குமாறும், பள்ளி முதல்வரிடம் ஆகஸ்ட், 2017 முதல் செலுத்தப்படாத பராமரிப்புத் தொகைக்காக மனைவியின் சம்பளத்தில் இருந்து ரூ.5000 பிடித்தம் செய்து நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறும் நாந்தேட் சிவில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள 2 உத்தரவுகளை உறுதிசெய்தது பாம்பே உயர்நீதிமன்றம்.  இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 25 ஆனது, விவாகரத்து ஆணைக்குப் பிறகும், ஆதரவற்ற மனைவி/கணவனுக்கு இடைக்கால அல்லது நிரந்தர ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமையை வழங்குகிறது.  வழக்கு  ------------ ஏப்ரல் 17, 1992 இல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் 2015 இல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு கணவர் மனைவியிடம் இருந்து மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார்.  மனைவி எம்.ஏ., பி.எட்., படித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மனைவி பட்டம் பெற, தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைத்து, வீட்டை நிர்வகித்து வந்ததாகவும், தனக்கென வருமானமும், அசையா சொத்துக்கள் ஏதும் இல்