கணவனுக்கு ஜீவனாம்சம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கணவனுக்கு_ஜீவனாம்சம்
உயர்நீதிமன்ற_தீர்ப்பு!

ஆசிரியையாகப் பணிபுரியும் மனைவி, தனது கணவனுக்கு 
மாதந்தோரும் ரூ.3,000 பராமரிப்புத் தொகையை வழங்குமாறும், பள்ளி முதல்வரிடம் ஆகஸ்ட், 2017 முதல் செலுத்தப்படாத பராமரிப்புத் தொகைக்காக மனைவியின் சம்பளத்தில் இருந்து ரூ.5000 பிடித்தம் செய்து நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறும் நாந்தேட் சிவில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள 2 உத்தரவுகளை உறுதிசெய்தது பாம்பே உயர்நீதிமன்றம். 

இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 25 ஆனது, விவாகரத்து ஆணைக்குப் பிறகும், ஆதரவற்ற மனைவி/கணவனுக்கு இடைக்கால அல்லது நிரந்தர ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமையை வழங்குகிறது. 

வழக்கு 
------------
ஏப்ரல் 17, 1992 இல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் 2015 இல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு கணவர் மனைவியிடம் இருந்து மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார். 

மனைவி எம்.ஏ., பி.எட்., படித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மனைவி பட்டம் பெற, தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைத்து, வீட்டை நிர்வகித்து வந்ததாகவும், தனக்கென வருமானமும், அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை எனவும், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதையும் மேற்கோள் காட்டினார் கணவர். 

எனவே பராமரிப்புத் தொகையாக கணவனுக்கு மாதம் ரூ. 3000 வழங்கவேண்டுமென உத்ரவிட்டது நாந்தேட் சிவில் நீதிமன்றம். 

வழக்கு தலைப்பு : பாக்யஸ்ரீ Vs. ஜகதீஷ்

Comments

Popular posts from this blog

(20ஜன21.20)சவுராஷ்டிரா சத்திரம்

உணவு வகைகளின் கலோரி அட்டவணை

கம்யூடேசன் முடிந்தவுடன் அப்ளிகேஷன் கொடுக்க வேண்டுமா?