Posts

Showing posts from October, 2019

கனரக வாகனம் ஹெவி லைசன்ஸ் எடுக்க கல்வித்தகுதி வேண்டாம்

*ஹெவி லைசென்ஸ்' எடுக்க கல்வித்தகுதி வேண்டாம்* சென்னை: 'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை' என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர் 'டிரைவிங் லைசென்ஸ்' பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம். தற்போது கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 8ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது. இதனால் ஓட்டுனர் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே கனரக வாகன உரிமையாளர்கள் 'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் கல்வித்தகுதியை நீக்க வேண்டும்' என மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி செப்23ல் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தியும் 'கனரக வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க வேண்டாம்' என உத்தரவிட்டுள்ளார். இதை பொது மக்களுக்குத் தெரியும் வகையில்

ஓய்வு ஊதியம் ஓர் முக்கிய செய்தி

ஓய்வூதிய இது முக்கியமான செய்தி. அன்பிற்குரிய நண்பர்களே 2015 ஆம் ஆண்டின் 01.07.2015 அன்று சிவில் மேல்முறையீட்டு எண் 1123 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு கவனிக்கப்படாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் ஸ்ரீ எஸ்.ஆர்.சென் குப்தா ஐ.பி.ஏ.க்கு எழுதிய ஒரு சுருக்கமான கடிதத்தைத் தவிர, வேறு எந்த தொழிற்சங்கமும் எடுக்கவில்லை படிகள். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். 1. ஓய்வூதியம் ஒரு உரிமை என்று பெஞ்ச் அதிகாரப்பூர்வமாக தீர்ப்பளித்துள்ளது, அதை செலுத்துவது அரசாங்கத்தின் விருப்பப்படி சார்ந்தது அல்ல. ஓய்வூதியம் விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அந்த விதிகளுக்குள் வரும் ஒரு அரசு ஊழியர் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. 2. ஓய்வூதியம் திருத்தம் மற்றும் ஊதிய அளவீடுகளின் திருத்தம் ஆகியவை பிரிக்க முடியாதவை என்று தீர்ப்பு மறுபரிசீலனை செய்துள்ளது. 3. திருத்தத்தின் போது அடிப்படை ஓய்வூதியம் அடிப்படை ஓய்வூதியத்தின் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது என்று பெஞ்ச் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 4. ஓய்வூதியதாரர்களின் முறையான நிலுவைத் தொகையை மறுக்க அரசாங்கம் நிதிச் சுமையை கோர முடியாது. 5. அரசாங்கம

தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

*தெலங்கானா: போக்குவரத்து ஊழியா்கள்24-ஆவது நாளாக வேலைநிறுத்தம்* _ Oct 29, 2019_ தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து நிறுவன (ஆா்டிசி) ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை 24-ஆவது நாளாக நீடித்தது. ஆா்டிசி ஊழியா்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் எம்எல்ஏ சாம்பசிவ ராவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவரை காவல்துறையினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆா்டிசி நிறுவனத்தை, அரசுடன் இணைக்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஆா்டிசியின் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் கடந்த 5-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமாா் 48 ஆயிரம் ஊழியா்கள் பங்கேற்றுள்ள இப்போராட்டத்துக்கு, எதிா்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, இருதரப்பும் பேச்சுவாா்த்தை நடத்தி, சுமுகத் தீா்வு காண வேண்டும் என்று ஹைதராபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆா்டிசி நிறுவனத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தவிர இதர கோரிக்கைகளை பரிசீலிக்கத் தயாா் என்று முதல்வா் சந்திரசேகா் ர

போர்வெல் ஆக்சிடென்ட் தடுக்க சட்டம் என்ன சொல்கிறது

*திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 66 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.* போர்வெல் விபத்தை தடுக்க சட்டம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ரங்கா டிவி நிருபர் வழக்கறிஞர் கே ஆர் நிர்மலாதேவி குடும்ப நல சிறப்பு வழக்கறிஞர் அவர்களைதொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் அளித்த தகவல் ஆழ் துளை கிணறு குறித்த சட்டம் TAMIL NADU PANCHAYATS (REGULATION OF SINKING OF WELLS AND SAFETY MEASURES) RULES, 2015  சட்டங்கள் 18.02.2015 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, இச் சட்டத்தின் கீழான பாதுகாப்பு நெறிமுறைகள்; ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர், அல்லது கிணருக்கான உரிமையாளர், கிணறு புதிதாக தோண்டும் போதும், அல்லது ஆழப்படுத்தும் போதும், அல்லது சீரமைக்கும் போதும், கீழ்க்கண்ட பாதுகாப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். 1.A. கிணறு தோண்டும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும். B. வேலை செய்யும் பணியாளர்கள் உரிய உரிமத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பத

இன்றைய வானிலை அறிக்கை

26-10-2019 சனிக்கிழமை Rengarao எச்சரிக்கை பதிவு நண்பர்களுக்கு வணக்கம் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் என உருவான ஒரு மேலடுக்கு சுழற்சி  சென்னையை மையமாகக் கொண்டு இலங்கை வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையிலிருந்து மேக கூட்டங்கள் வட தமிழக கடலோரமாக பயணித்து மகாபலிபுரம் அருகில் வந்ததும் நிலப்பரப்பில் நுழைந்து சென்னையில் மழையை பொழிய வைத்து விட்டு வடக்கு நோக்கி ( ஆந்திரா  நோக்கி) நகர்ந்து சென்ற வண்ணம் உள்ளன. இதனால் இன்று அதிகாலை 2-15 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு தொடர்ந்து  பொழிந்து வருகிறது. நேற்றைய பதிவில் குறிப்பிட்டபடி இன்று பிற்பகல் இலங்கை அருகில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து  வருவதால் சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பொழிய உள்ளது. ஆகையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம்  உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை பாதிப்பதாக உள்ளது. வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வானிலை மாற்றம் சென்னையை இருளடையச் செய்துள்ளது. ஆகையால்

ஜியோ வின் புதிய பிளான்கள்

*`222... 333... 444... 555...!’ - ஜியோவின் புதிய IUC பிளான்கள்! JioPlans* டெலிகாம் வட்டத்தில் சமீபத்தில் பெரும் பேசுபொருளாக இருப்பது, இனி வாய்ஸ் அழைப்புகளுக்கென்று கட்டணமே கிடையாது என்று அறிவித்து தற்போது மற்ற நிறுவன அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிப்போம் என்று ஜியோ பல்டி அடித்திருப்பதுதான். டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே பரிமாற்றப்பட்டு வந்த Interconnect usage charge எனப்படும் IUC தொகையை (நிமிடத்திற்கு 6 பைசா) வாடிக்கையாளரிடம் இருந்தே பெறச் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது அந்த நிறுவனம். இந்த கட்டணத்தைச் செலுத்த ரூபாய் 10, 20, 50, 100 என்ற தொகைகளில் சிறப்பு பேக்குகளையும் அப்போது அறிமுகப்படுத்தியது. IUC விவகாரம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள். இப்போது தனியாக மட்டுமில்லாமல் பொதுவான டேட்டா பேக்குகளுடன் இந்த கட்டணத்தை இணைக்கும் வண்ணம் புதிய பேக்குகளை அறிவித்திருக்கிறது ஜியோ. *அவற்றின் விவரங்கள் கீழே...* ரூபாய் *222- 28* நாள்கள்- தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 1000 IUC நிமிடங்கள் (பிற நிறுவன அழைப்புகள்) ரூபாய் *333- 56* நாள்கள்- தின

போக்குவரத்துக்கழக தொழிற்சங்க வழக்கு

இன்று சுப்ரீம் கோர்ட்டில் தொழிற்சங்க அங்கீகார வழக்கு CA.No.10838/ 2013 Court 16 ல்வரிசை எண் 31 படி அக்டோபர் 21 விசாரணை நடைபெறும். சென்னை ஐகோர்ட்டில் தொழிற்சங்க அங்கீகார வழக்கு கோர்ட் 8 ல்வரிசை எண் 20  ல் 21 அக்டோபர் 2019நடைபெறும். தொழிற்சங்க அங்கீகார வழக்கு ஒரே நாளில் சுப்ரீம் கோர்ட் & ஹைகோர்ட்டில் எவ்வாறு நடைபெறும் என்ற சந்தேகம் வருகிறதா? சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு ஏற்கனவே 2013  ஆம் ஆண்டு தொடரப்பட்ட வை சென்னை ஹை கோர்ட் வழக்கு 2019 தொடரப்பட்டது. அங்கீகார வழக்கில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஏதாவது பலன் உண்டா என்றால் இல்லை ஆனால்பணியாற்றிய நிர்வாகத்தை தெரிந்து கொள்வதற்காக அனுப்பப்படுகிறது .

தமிழக அரசின் இணையதள சேவையை மக்களுக்கு கொண்டு சேர்க்க அதிரடி நடவடிக்கை

*உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைனிலேயே குறைகளை சொல்லி தீர்வு காணலாம்* இது தகவல் தொழில்நுட்ப காலம். இணையதள வசதியின் காரணமாக உட்கார்ந்த இடத்திலேயே, உள்ளங்கைக்குள் உலகமே, வந்து விட்டது. இணையதள சேவையை பயன்படுத்தி மக்களுக்கு அரசின் சேவைகளை கொண்டுசேர்க்க,  தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெட்டிசன் புராசசிங் போர்டல் (Petition Processing Portal- PPP) என்ற ஒரு இணையதளத்தை செயல்படுத்தி வருகிறது. இணையதள முகவரி, http://gdp.tn.gov.in/ பொதுவாக நாம் எந்த ஒரு துறை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும், அந்த துறையின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு கால்கடுக்க க்யூவில் நின்று மனுக்களை வழங்க வேண்டியிருக்கும். அதுவும் ஒரே நாளில் முடியக்கூடிய காரியமா என்றால் கிடையாது? எத்தனையோ அவசர வேலைகளை விட்டுவிட்டு இந்த பிரச்சினைக்காக நாம் ஏன் அலைய வேண்டும், என்ற எண்ணத்திலேயே பலரும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது உண்டு. . இதற்கெல்லாம் இந்த வெப்சைட் ஒரு தீர்வை கொண்டு வந்து விட்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து நீங்கள் எந்த ஒரு பிரச்சனையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு

சீனியர் சிட்டிசன் வாழ்க்கை

அறுபது அகவையைக் கடந்த தங்களின் வாழ்க்கையை மாற்ற திட்டமிடல். திருமணமான தங்கள் பிள்ளைகளோடு தங்குவதை இயன்றவரை தவிர்த்திடுங்கள். அவர்கள் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.‌ அவர்களாக விரும்பி வேண்டிக் கேட்டுக்கொண்டாலொழிய, நீங்களாக மூக்கை நுழைத்து, உங்கள் ஆலோசனைகளை அள்ளித் தெளிக்காதீர்கள். தங்கள் துணைவரை எப்போதையும்விட இப்போது அதிகமாக நேசியுங்கள். மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் பேசிக்கொள்ளுங்கள். முடியும்போதெல்லாம் ஒன்றாகப் பயணியுங்கள். உடல்நலம் பேணுவதில் அலட்சியம் காட்டாதீர்கள்; இதற்காகச் செலவு செய்வதற்குச் சற்றும் தயங்காதீர்கள். உங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருங்கள். உறவினர்கள், நண்பர்களின் போர்வையில் தங்களை நெருங்குவோரிடம் ஏமாந்துவிடாதீர்கள். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, புதிய நிதிநிறுவனங்கள் - புதிய வங்கிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள். பிறந்தநாள், திருமணநாள், பண்டிகைநாள்  போன்ற இன்றியமையாத - மகிழ்ச்சியான தருணங்களில் தங்களின் பிள்ளைகளுக்கும், மருமக்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் அன்பளிப்புகளையும்  பரிசுகளையும் வழங்கிட மறவாதீர்கள். முடியும்போதெல