Posts

Showing posts from August, 2019

இட்லி சந்தை

ஆட்டுச் சந்தை மாட்டுச் சந்தை மீன் சந்தை சந்தை காய்கறி சந்தை என பல சந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இட்லிக்கு ஒரு சந்தை இருப்பதே பெரும்பாலோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை இது ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இந்த சந்தை இயங்கி வருகிறது. சந்தை யில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் இட்லிகள் தயாராகிறது.ஸ்பெஷல் ஆர்டர் என்றால் இட்லி விற்பனை பல லட்சங்களை தொடும் .மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்தது போல அவர்கள் உண்ணும் உணவுப் பொருட்களும் காலத்திற்கேற்ற மாற்றம் அடைந்து வருகிறது சாதாரண உணவு வகைகளும் மறைந்து இன்று சைனீஸ் பாஸ்ட்புட் என எவ்வளவோ மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன ஆனால் என்னதான் மாற்றங்கள் வந்தாலும் தென்னிந்தியாவில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு உணவுப் பொருள் உண்டு என்றால் அது இட்லி தான்.வெளிநாட்டு அன்பர்கள் இந்தியா வந்தாலும் மிகவும் கேட்டு வாங்கி சாப்பிடுவது இட்லியைக் தான் நம் தமிழ் நாட்டவர்களும் வெளிநாடு சென்றாலும் தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவதும் இட்லியை தான். குழந்தைகள் முதல் பாட்டி வரை அனைவரின் விருப்ப உணவாக இருப்பதும் இட்லி அந்த அளவுக்கு அனைவருக்கும் ப

கனரா வங்கி ஏடிஎம் பணம் எடுக்க புதிய நடைமுறை

கனரா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனிமேல் நீங்கள் கனரா பேங்க் ஏடிஎம் பணம் எடுக்க சென்றால் கட்டாயம் உங்களுடைய மொபைல் போனை எடுத்துச் செல்லுங்கள். உங்களது வங்கியில் பதிவு செய்த மொபைல் எண் உள்ள மொபைல் ஆக இருக்க வேண்டும். போன்இல்லாமல் பணம் எடுக்க முடியாது.நாட்டிலேயே முதல்முறையாக கனரா வங்கி இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது.ஸ்கிம்மர் மற்றும் ஜாமர் போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் நிகழ்ச்சிகளை தடுக்க இது போன்ற செயல்பாட்டை கனரா வங்கி செயல்படுத்தியுள்ளது நீங்கள் கனரா வங்கி ஏடிஎம் யில் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகை எடுக்க விரும்பினால் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.அவை பதிவு செய்தால்தான் ஏடிஎம் யில்பணம் எடுக்க முடியும் ஏடிஎம் எந்திரத்தில் பதிவு செய்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஓடிபி எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது. நாட்டிலேயே முதல் முறையாக இந்த வசதி கனரா வங்கியில் தான் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயல்பாடு கனரா வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் கனரா வங்

பேட்டரி பஸ்சின் சிறப்பம்சங்கள்

பேட்டரி பஸ்ஸின் சிறப்பம்சங்கள் *இரண்டு மின்கலன்கள் பொருத்தப்பட்ட பேருந்துக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டரும், 6 மின் கலன்கள் கொண்ட பேருந்துகளுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 250-300 கி.மீ வரை இயங்கும்.* *பேருந்தில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்துக்கொள்ளும் வகையில் ஜி.பி.எஸ் வசதிகள் உள்ளன.* *32 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் மின்கசிவு ஏற்பட்டால் தானே கண்டறிந்து சீர் செய்துக்கொள்ளும்.* *இந்த பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.11 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் இருக்கும்.* *அசோக் லேலாண்ட் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார பேருந்துகள், சோதனை ஓட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 525 பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.* *இது முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பேருந்து. *9.3 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பேருந்து லித்தியம் அயன் மின்கலம் மூலம் இயங்கும். ஒவ்வொரு முறையும் மின்கலம் மாற்றப்பட்டு பேருந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.* இந்த மின்கலத்தில் ஒரு முறை மின்சாரத்த

சௌராஷ்ட்ரர்‌ எழுத்தாளர் ரங்காராவ்

சௌராஷ்டிரா எழுத்தாளர் ரெங்காராவ் மதுரை கோவிலுக்கு பெயர் போனது, மதுரையிலும் நகரைச் சுற்றிலும் பல கோயில்கள் உள்ளன.நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது தவிர வண்டியூர் மாரியம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில் உள்ளது. இதற்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல் படை வீடு, அழகர்கோயில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில் என பல கோவில்கள் அமைந்துள்ளன. மதுரையில் முக்கியமான சுற்றுலா தலங்களாக திருமலை நாயக்கர் மஹால் காந்தி மியூசியம் ஆகியவை உள்ளன மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழனி கொடைக்கானல் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.சிறப்பு மிக்க இவ்வூரில்  சௌராஷ்ட்ரா மொழி பேசும் சமூகத்தில் வீட்டு பெயர் குப்பலு குடும்பத்தில் ரெங்காராவ் பிறந்தார்.கவிஞர் எழுத்தாளர் பொதுநலத் தொண்டர் என பல அடைமொழிக்கு உரியவர். செவ்வாய் மணி என்ற பெயரில் ஒரு மாதாந்திர இதழ் தொடங்கி போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், கவிதை கலைஞர்களுக்கும்  ஓர் பாலமாக இலக்கிய பத்திரிக்கையை தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்தி வந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக

நியூ பேட்டரி பஸ்

புதிய பேட்டரி பஸ் அறிமுகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேட்டரி பஸ் அறிமுகம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய பேட்டரி மக்களின் பயன்பாட்டிற்கு இயக்குகிறது 12 மீட்டர் பஸ் விவரக்குறிப்புகள் தொழில்நுட்பம் விவரங்கள் நீளம்: 12000 மி.மீ. அகலம்: 2590 மி.மீ. உயரம்: 3300 மி.மீ. வீல்பேஸ்: 6000 மி.மீ. அதிகபட்ச பயணிகள்: ஸ்டாண்டீஸ் உட்பட 72 பேர் அதிகபட்ச வேகம்: மணிக்கு 100 கி.மீ. குறைந்தபட்ச தரை அனுமதி: 180 மி.மீ. குறைந்தபட்ச திருப்பு ஆரம்: 24 மீ பொறையுடைமை மைலேஜ்: 200 கி.மீ. சஸ்பென்ஷன் சிஸ்டம்: ஏர் சஸ்பென்ஷன் ஃப்ரண்ட் 2 ஏர்பேக்குகள் / பின்புற 4 ஏர்பேக்குகள் Chassis_Configuration டயர்: 275/70 ஆர் 22.5 (குழாய் இல்லாதது) திசைமாற்றி அமைப்பு: ஹைட்ராலிக் பவர் பிரேக்கிங் சிஸ்டம்: டூயல் சர்க்யூட் ஏர் பிரேக், ஃப்ரண்ட் டிஸ்க் மற்றும் ரியர் டிரம் Body configuration ஏபிஎஸ்: 4 எஸ் / 4 எம் குளிரூட்டும் முறை: மின்னணு விசிறி சட்ட கட்டமைப்பு: மோனோகோக் தரை தோல்: எதிர்ப்பு மாடி வினைல் அணியுங்கள் டாஷ்போர்டு: சொகுசு டாஷ்போர்டு உள

பர்மா சட்னி

பர்மா சட்னி தினமும் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி தானா என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ பர்மா சட்னி. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இதோ செய்முறை: தேவையானவை: பெரிய வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 4 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: வாணலியில் கடலைமாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், கடலை மாவை தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும். கடலை மாவில் தண்ணீர் குறைவாக ஊற்றி கரைத்து ஊற்றினால் சட்னி ரொம்பவே கெட்டியாக இருக்கும். நீர்க்க கரைத்தால் தான் கடலைமாவு வெந்தது

சௌராஷ்டிரா இராஷ்ட்ர பந்து எல்.கே.டி

மதுரையின் வளர்ச்சி யில் எல்.கே.டியின் பங்கு!"மதுரை சௌராஷ்டிர உயர் நிலைப்பள்ளியில்" நடைபெற்ற மதிய உணவு திட்டம்தான், அரசின் இலவச மதிய உணவுத் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது. மதிய உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வழிகாட்டிய முன்னோடி என கல்வித் தந்தை திரு.நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். சௌராஷ்டிர உயர்நிலைப் பள்ளி 1886ஆம் ஆண்டுதொடங்கப்பட்டது.இதன்முதல்ஆசிரியரும், நிர்வாகியும் திரு.எல்.கே.துளசிராம்அவர்கள்.மதுரை நெசவாளர்களின் வாழ்வில்ஒளியேற்றியவர்திரு.எல்கே.டி.அவர்கள்.சாயத்தொழிலில்'அவுரி'க்குப்பதில் 'அலிஜரைன்' என்ற புதிய முறையை புகுத்தியவர்.இதன் காரணமாகநெசவாளர்களின் பொருளாதார நிலை உயர்ந்தது. தொழிற்கல்வியின் அவசியத்தைஉணர்ந்து, திருப்பரங்குன்றம் சாலையில் "தமிழ்நாடு பாலிடெக்னிக்"உருவாக்கினார்.1926ஆம் ஆண்டுசென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக மதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் தடையைமீறி,பாரதி யார்  பாடல்களை சட்டசபையில் பாடி  விடுதலைஉணர்ச்சியை மக்கள் அற

சௌராஷ்டிரர் வி. என். சாமி இலக்கிய பரிசு

சௌராஷ்டிரர். வி.என்.சாமி.இலக்கிய பரிசு கண்டேன்! இலக்கிய பரிசு பெறும் அழைப்பிதழை  மகிழ்ந்தேன் தொடரட்டும் சமுதாயப் பணிகள். எழுத்து தமிழ் பணி ததும்புகிறது தொடர்ந்து வெற்றி பெற பாராட்டுக்கள். வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் உங்களது எழுத்துக்களில் தென்றலில் தழுவலும் புயலின் சீற்றம் கொண்டு எதார்த்தங்கள் நிரம்பி வழியும். இவரின் எழுத்துக்கள் நம்மை மகிழ்விக்கும்.மகிழ்வித்து மகிழ்விப்பார் வி என் சாமி. வரலாற்று ஆய்வாளர் மூத்த பத்திரிகையாளர் பல புத்தகங்கள் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.இவர் பல ஆண்டுகாலம் தினமணி நாளிதழில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு உதய மணி என்ற நாளிதழ் தொடங்கி அதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளர் ஆக பத்திரிகையை நடத்தி வருகிறார். இவர் சௌராஷ்டிரா சமூகத்தில் பிறந்தவர் . மதுரையில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் பிராமணர்களுடைய ஆச்சாரங்கள் சிலவற்றை அதாவது பூணூல் அணிதல் போன்றவற்றை மேற்கொண்டனர் இதற்கு பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே  ராணி மங்கம்மாள் சௌராஷ்டிரர்கள் பிராமணர்களுக்கு உரிய,உரிமை உள்ளவர்களா இல்லையா ?என்பதை சரித்திர வல்லுனர்களை குழுவைக் கூட்டி

அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்.

அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்துஊழியர்களுக்கு  ரூ.1,093 கோடி பணபலன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப் பலன்களை வழங்குவதற்க்காக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு  குறுகிய காலக்கடனாக தமிழக அரசு ரூ.1,093 கோடியை வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங் களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை வழங்குவது தொடர்பாக அவ்வப்போது போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை கருத்தில்கொண்டு, அரசு சார்பில் முன்பணம் மற்றும் குறுகிய கால கடன்கள் வழங்கப்பட்டு, அந்த தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் வரையில் ஓய்வு பெற்றவர்களுக் கான பணப்பலன்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்நிலையில், அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்று வோருக்கு பணப்பலன்களை வழங்க, 2019-20-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளில் ரூ.1,093 கோடி ஒதுக்கி நிதித்துறையில் கடந்த ஜூலை 31-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் போக்குவரத்து துறை சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு

சாப்பிடும் போது பேசக் கூடாது ஏன்?

சாப்பிடும் போது பேசக்கூடாது .. நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் உண்ணும் உணவுக்கும், உண்ணும் முறைக்கும் பல்வேறு தொடர்புகள் உண்டு. நொறுக்க தின்றால் நூறு வயது என்று பழமொழி கூட உண்டு. அதேபோல உணவு உண்ணும் போதும் பேசக்கூடாது என்று கூறுவார்கள் அதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் உள்ளன. நம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம். வாய்ப்பகுதியில் இருந்து நமது உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்று பகுதிக்கு செல்கிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. நமது உணவு குழாயும், சுவாச குழாயும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது. இதனால் நாம் உணவு உண்ணம்போது தப்பி தவறி உணவானது சுவாச குழாயினுள் சென்றுவிட்டாள் அது நமது உயிருக்கு மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும். இதுபோன்று நேரத்தில் சுவாச குழாயில் இருந்து உணவை வெளியேறும் நிகழ்வே புரையேறுதல். அத

சக்கர வியூகத்தின்ரகசியம்

சக்கர வியூகத்தின் ரகசியம் சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும். இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்த சூழல் எண் மாறும

உலக தேனீக்கள் தினம் 17 ஆகஸ்ட்

உலக தேனீக்கள் தினம். 17 august சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புகள் வாய்ந்த தேனீக்கள் பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக… தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன. இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே ஆண் தேனீக்களின் செயலாகும். மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும்